தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஆக 02, 2026 12:25 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026 12:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., முன்னாள் அமைச்சரும், திருச்செந்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன்: என் தொகுதியில் உள்ள குருங்காட்டூர் பகுதியில், எனக்கு 430 ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு 148 ஓட்டுகள் கிடைத்தன; தொகுதியில் யாரென்றே தெரியாத த.வெ.க., வேட்பாளருக்கு, 406 ஓட்டுகள் கிடைத்துள்ளன. என்ன காரணத்திற்காக, அவருக்கு இவ்வளவு ஓட்டு போட்டீர்கள்? இனி வரும் தேர்தலிலாவது, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

டவுட் தனபாலு: கடந்த 2001ல் இருந்து, நீங்க தான் திருச்செந்துார் எம்.எல்.ஏ.,வா இருக்கீங்க... அதனால, 430 ஓட்டுகளும் முழுக்க முழுக்க உங்களுக்காக மட்டுமே விழுந்தவை என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம், த.வெ.க., வேட்பாளருக்கு விழுந்த 406 ஓட்டுகளும், விஜய் முகத்துக்காக மட்டுமே விழுந்த ஓட்டுகள் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: ஏற்கனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இருந்து, வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் விலகி விட்டன. இந்நிலையில், தற்போது புரட்சி பாரதம் கட்சியும் விலகி உள்ளதை, அக்கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வே புயலில் சிக்கிய புளிய மரம் மாதிரி உருக்குலைந்து கிடக்குது... அந்தக் கூட்டணியில் இருந்து அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால், 'பெரிய அளவில் ஜெயிக்க முடியாது'ன்னு, எல்லா கட்சிகளும் ஓட்டம் பிடிக்கின்றன என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், இப்படி வெளியேறிய கட்சிகளை, த.வெ.க., கூட்டணியில் சேர்த்துக்குவாங்களா என்பதும், 'டவுட்' தான்!



பத்திரிகை செய்தி: 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை புகழ்ந்து பேசும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எழுதிய நுாலை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வெளியிடக்கூடாது' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, காங்., பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தமிழக நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ராகுலின் தந்தை ராஜிவ் கொலைக்கு மூளையாக இருந்த பிரபாகரனுக்கு இன்றும் புகழ் மாலை சூடிட்டு இருக்கிற வைகோ புத்தகத்தை, ராகுல் வெளியிடுவதை, உண்மையான காங்., தொண்டர்கள் ஏத்துக்க மாட்டாங்க... ஆனா, தொண்டர்கள் குரலுக்கு செவிசாய்க்கும் பழக்கம் ராகுலுக்கு இருக்கிறதா என்பது, 'டவுட்!' தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us