Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 01, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : பிப் 01, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக கவர்னர் ரவி: காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள பரந்த நிலத்தில், 1956ம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட, பிரமாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி பிறந்த நாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை, நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை, காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும், முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள், பிடிவாதமான மறுப்பை சந்தித்தன.

டவுட் தனபாலு: கிண்டி காந்தி மண்டபம் என்பது, தமிழகத்தின் அடையாள சின்னம்... ஒருவேளை, நீங்க கோரிக்கை வைக்காமல் இருந்திருந்தாலே, காந்தி மண்டபத்தில் நினைவு தின நிகழ்ச்சியை நடத்தியிருப்பாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், நள்ளிரவில் காரில் பயணித்த பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய காரில் பயணித்த சிலர், குடிபோதையில் வழிமறித்து மிரட்டியுள்ளனர். அப்பெண்களை தாக்க வந்ததோடு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், வீடு வரை துரத்திச் சென்ற காட்சிகள், நெஞ்சை பதற செய்கின்றன.

டவுட் தனபாலு: 'இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்' என, ஆளுங்கட்சியினர் பெருமை அடிச்சுக்குறாங்களே... ஆனா, வடமாநிலங்களை விட மோசமான நிலைக்கு, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு போயிட்டு இருக்கு என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே சாட்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!





வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: சென்னை ஈ.சி.ஆர்., பகுதியில் இளம்பெண்கள் வந்தகாரை, தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள், கும்பலாக துரத்திய சம்பவத்தில், காரில் கட்சிக்கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே, அவர்கள் தி.மு.க.,வினர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. மாற்று கட்சியினரும் கூட தி.மு.க., கொடி கட்டி சென்றிருக்கக் கூடுமே.

டவுட் தனபாலு: இப்படி எல்லாம் மறுப்பு தெரிவிக்கலாம்னு தி.மு.க.,வினரே யோசனை பண்ணியிருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்... தி.மு.க.,வுக்கு விழுந்து விழுந்து வக்காலத்து வாங்குறதுல காங்., தலைவர்களுக்கும், உங்களுக்கும் கடும் போட்டியே நடக்குதோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap