/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வைர மோதிரத்தை மீட்டு தந்த மாணவர்களுக்கு பாராட்டு
/
வைர மோதிரத்தை மீட்டு தந்த மாணவர்களுக்கு பாராட்டு
UPDATED : செப் 13, 2025 07:04 AM
ADDED : செப் 13, 2025 12:41 AM

சென்னை: பூந்தமல்லி அரசு பள்ளியில் கிடந்த வைர மோதிரத்தை கண்டெடுத்து, ஆசிரியையிடம் நேர்மையுடன் ஒப்படைத்த இரு மாணவர்களை, ஆசிரியர்கள் நேற்று பாராட்டினர்.
பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியையாக பணியுரியும் கவுசல்யா என்பவர், வைரக்கல் பதித்த மோதிரத்தை, பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் தொலைத்துவிட்டார். இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். பள்ளி வளாகம் முழுதும் தேடியும், மோதிரம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அதே பள்ளியில் எட்டாவது பயிலும் சம்சுதீன், ஏழாவது பயிலும் ஷாநவாஸ் ஆகியோர், பள்ளியில் விளையாடும் போது மோதிரத்தை கண்டெடுத்து, ஆசிரியையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, நேற்று காலை பள்ளி துவங்கியதும், அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் சம்சுதீன், ஷாநவாஸ் ஆகியோரின் நேர்மையை பாராட்டிய ஆசிரியர்கள், அவர்களுக்கு பரிசு வழங்கினர்.