PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

கோவை இருகூரில் இருந்து கரூர் வரை, 23 ஆண்டுகளுக்கு முன் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது. இதே வழித்தடத்தில், கர்நாடகாவின் தேவனகுந்தி வரை புதிதாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விளைநிலங்களை தவிர்த்து, நெடுஞ்சாலையோரம் இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் பங்கேற்று, ஆதரவு தெரிவித்த பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், 'உயர் அதிகாரிகள், கலெக்டர் ஆகியோர், விவசாயிகளுடன் பேச வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறை செயலரிடம் வலியுறுத்தி உள்ளேன்.
'வழித்தடத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என, ஆராய வேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்; இதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்...' என்றார்.
விவசாயி ஒருவர், 'தீர்வு கிடைச்சுட்டா, எங்க ஓட்டு பா.ஜ.,வுக்கு தான்...' எனக் கூற, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.