Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/'அதான் இங்க இருக்கீங்க!'

'அதான் இங்க இருக்கீங்க!'

'அதான் இங்க இருக்கீங்க!'


PUBLISHED ON : பிப் 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் மதுரையில் நடந்தது.

இதில், பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேசுகையில், 'ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம் மட்டுமே கட்சி, ஆட்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க என்ன அவசரம். அவர் என்ன எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா?

'கூட்டணிக்கு யாராவது வருவரா என கடை விரித்து உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் இருப்பவர்கள் யாருக்கும் முதுகெலும்பு இல்லை. நான் அங்கு இருந்திருந்தால், 'உங்களால் கட்சிக்கு கெட்ட பெயர். ராஜினாமா செய்யுங்கள் என, கூறியிருப்பேன்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'அதான் நீங்க இங்க இருக்கீங்க...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us