Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'எம்.பி.,க்கு தான் இந்த எச்சரிக்கை!'

 'எம்.பி.,க்கு தான் இந்த எச்சரிக்கை!'

 'எம்.பி.,க்கு தான் இந்த எச்சரிக்கை!'


PUBLISHED ON : ஏப் 12, 2026 02:01 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார், பேபி மஹாலில், தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், அமைச்சர் துரைமுருகனின் மகனான, வேலுார் தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ.,க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலுார் மேயர் சுஜாதா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நந்தகுமார் பேசுகையில், 'ஒரு தொகுதிக்கு பலர் சீட் கேட்டிருப்பர். கேட்பது அவர்கள் உரிமை; ஆனால், சீட் வழங்குவது கட்சி தலைமையின் உரிமை. சீட் கிடைக்காதவர்கள், தேர்தலில் குழிபறிப்பு வேலைகள் பார்த்தால் அவ்வளவு தான்.

'கட்சி தலைமை மூலம் உங்கள் பொறுப்புகள் பறிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த பிரச்னை என்றாலும், மாவட்ட செயலரிடம் சொல்லுங்கள்; உள்குத்து வேலைகள் பார்க்க கூடாது'என்றார்.

இதை கேட்ட நிர்வாகி ஒருவர், 'கதிர் ஆனந்துக்கும், நந்தகுமாருக்கும் ஆகவே ஆகாது... இந்த எச்சரிக்கை எல்லாம் அவருக்கு தான்... ' என, முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap