sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'நாமும் மாப்பிள்ளையை நிறுத்துவோம்!'

/

'நாமும் மாப்பிள்ளையை நிறுத்துவோம்!'

'நாமும் மாப்பிள்ளையை நிறுத்துவோம்!'

'நாமும் மாப்பிள்ளையை நிறுத்துவோம்!'


PUBLISHED ON : மே 17, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 17, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜமுத்து. இத்தொகுதிக்கு உட்பட்ட நிலவாரப்பட்டி ஊராட்சி, ராஜமுத்துவின் மாமனார் ஊர். சமீபத்தில் இங்கு, தி.மு.க., 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் பேசுகையில், 'இப்பகுதியில் நம் கட்சி நன்றாக உள்ளது; ஆனாலும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுகள் குறைந்தன. சொந்தக்காரங்க வந்தாங்கன்னு ஓட்டு போடுறீங்க... இந்த எம்.எல்.ஏ., உங்க ஊருக்கு என்ன செஞ்சாரு? மக்களுக்கு தேவையானதை நாங்கதானே செய்கிறோம்' என்றார்.

இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'நம்ம ஊர்க்காரங்க பாசக்காரங்க... நம்ம ஊர் மாப்பிள்ளைன்னு, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு போட்டுட்டாங்க... நாமளும் இந்த தொகுதியில் பெண் எடுத்தவரா பார்த்து நிறுத்தி பார்ப்போமா...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar