தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேநேரம், மாணவர்கள் மத்தியில் கிறிஸ்துவ மதத்தை திணித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் இஸ்லாமிய கருத்துக்களை பரப்பி வரும் தன்னம்பிக்கை பேச்சாளர் பாத்திமா சபரிமாலா ஆகியோர் மீது, தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஆட்சியாளர்களுக்கு ஹிந்து மதம், ஆன்மிகம் ரெண்டும் தீண்டத்தகாத வார்த்தையா இருக்கும்போது, அப்படி தான் நடந்துக்குவாங்க!

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'கடந்த பிறவியில்பாவம் செய்திருந்தால், அவர்களுக்கு மகன்கள் பிறப்பர்;புண்ணியம் செய்திருந்தால் மகள்கள் பிறப்பர்' என, அரசு பள்ளி விழாவில் அமைச்சர் காந்தி பேசி உள்ளார். மூட நம்பிக்கை பேச்சாளரான அமைச்சர் காந்தியை கைது செய்ய வேண்டும். 'என் ஏரியாவில் வந்து பேசியிருக்கிறான்; சும்மா விட மாட்டேன்' என, மகா விஷ்ணுவை பேசிய, அமைச்சர் மகேஷ் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்.

பெண் குலத்தை போற்றும் வகையில் தான் அமைச்சர் பேசினார்னு அதுக்கு சப்பைக்கட்டு கட்டுவாங்களே!

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: எதிர்க்கட்சி தலைவர்பதவி என்பது மிகவும் பொறுப்பான பதவி. அப்பதவியில் இருந்தபடி, காங்., எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வெளிநாடுகளில், நம் ஜனநாயகம், தேர்தல்முறைகள் குறித்து தவறான தகவல் பரப்பி வருகிறார்; இது, அப்பதவிக்கு அழகல்ல.

ஏடாகூடமா பேசி எம்.பி.,பதவியை இழந்த மாதிரி, இப்ப இருக்கிற பதவியையும் பறிகொடுக்க வழி தேடுறாரோ?

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:'ஆசிரியர்கள் முதலில் கேள்வி கேட்க பழக வேண்டும்' என, அமைச்சர்மகேஷ் கூறியுள்ளார். இனி, அவர் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், ஆசிரியர்கள் மறக்காமல் அவரிடம்,'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறிய, பழைய ஓய்வூதியம் எப்போது வரும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைந்து, மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தருவோம் என சொன்னீங்களே... அதை எப்போ தருவீங்க?' என கேளுங்க. அவர் உண்மையான பதிலை நிச்சயம் அன்போடு தருவார்.

இப்படி எல்லாம் நமக்கு சோதனை வரும்னு பள்ளிக்கல்வி அமைச்சர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us