Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. போலீசார் சுதந்திரமாக செயல்பட்டனர். கட்சி தலையீடு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் தலையீடு அதிகமாக உள்ளது. சட்டம் - ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியின்போது நடிகர் சூர்யா போன்ற சமூக ஆர்வலர்கள் அதிகம் இருந்தனர்.

இன்று அவர்கள் எங்கே?

இவர் வேற... அவரே கங்குவா பட தோல்வியில் துவண்டு கிடக்கிறார்... அவரை போய் வம்புக்கு இழுக்கிறாரே!



முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அண்ணாபல்கலை வளாகத்துக்குள் நடந்த பாலியல் கொடுஞ்செயல் குறித்த தமிழக காவல் துறை விசாரணை மீது மக்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறது. தங்கள் மீது படிகிற களங்கத்தையும், தமிழக காவல் துறை மாண்பின் மீது ஏற்பட்டுள்ள ஐயத்தையும் துடைத்தெறிய,மிக நேர்மையான விசாரணையை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்ட முதல்வர் உறுதியேற்க வேண்டும்.

வெறும் வாயை மென்ற எதிர்க்கட்சிகளுக்கு அவல் மாதிரி, அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் சிக்கிடுச்சு... முதல்வர், இந்த விஷயத்தை கவனமாகவே கையாளணும்!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'அண்ணா பல்கலைவிவகாரத்தில், நடவடிக்கை எடுத்த பிறகு, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி என்ன பயன்?' என, கனிமொழி கூறியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன், 'வருமுன் காப்போம்' என்றீர்கள்.ஆட்சிக்கு வந்த பிறகு,'வந்தபின் பார்ப்போம்' என்கிறீர்கள். அதற்குதான் இந்த போராட்டம்.

உங்களை, 'ஆக்டிவ்'வாகவே வச்சிருக்காங்களே... அதுக்கு பாராட்டு தெரிவிக்கலாமே!

அ.ம.மு.க., பொதுச்செயலர்தினகரன் அறிக்கை: சென்னை, விருகம்பாக்கத்தில் அனுமதியில்லாத இடத்தில்ஒட்டப்பட்ட முதல்வர் போஸ்டர் மீது, மூதாட்டி ஒருவர் செருப்பு வீசிய காட்சிகளை பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி, பொதுமக்கள்மீது தாங்க முடியாத சுமையைஏற்படுத்திய, முதல்வருக்கு பாராட்டு விழாவா நடத்த முடியும்?

பாராட்டு விழா நடத்த வேணாம்... அதுக்காக, முதல்வர் படம் மீது செருப்பு வீசியதை நியாயப்படுத்தலாமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap