sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: தமிழகத்தில், 'இண்டியா' கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது. திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். திருவள்ளுவர் விஷயத்தில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தோடு நான் உடன்படுகிறேன்.தேர்தல் நெருங்கிடுச்சு... திருவள்ளுவர் விஷயம் மட்டுமல்ல, தி.மு.க.,வோட எல்லா கருத்துக்கும் உடன்பட்டா தான் சீட் பெற முடியும்கிறதுல தெளிவா இருக்காரோ?



அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: மக்களை தேடி மருத்துவம் போல, தொழிலாளரை தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய திட்டத்திற்கு தேவையானமருத்துவர்கள், பணியாளர்கள் நியமனம் பற்றி அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை. அதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.அப்படி புதுசா நியமிக்கிற எண்ணம் இருந்தா சொல்லி இருக்க மாட்டாரா... இருக்கிற வங்களை வச்சே வண்டியை ஓட்டலாம்னு நினைக்கிறார் போல!



அகில இந்திய காங்., செயலர் விஸ்வநாதன் பேச்சு: மின்னணு ஓட்டு இயந்திர பெட்டியை ஓட்டு சாவடிக்கு கொண்டு வருவது, எடுத்து செல்வது, துடைத்து வைப்பது தான் தேர்தல் கமிஷன் பணி. அதன் உள்ளே இருக்கும் சாப்ட்வேரை தயாரித்தது எந்த நாடு, சிப் தயாரித்தது எந்த நாடு, சாப்ட்வேர் கோடு யாரிடம் உள்ளது என்பதை வெளிப்படை தன்மையுடன் அறிவிக்க வேண்டும். ஓட்டு இயந்திரம் மீதான சந்தேகத்தை தீர்த்து வைக்கும் வகையில், பொது விவாதம் நடத்த வேண்டும்.தேர்தலில் தோற்ற பிறகு சொல்ல வேண்டியதை இப்பவே சொல்றாரு... ரிசல்ட்டை ஓரளவு கணிச்சிட்டாரோ?



நடிகரும், இயக்குனருமான தங்கர்பச்சான் அறிக்கை: ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசாக கார் தரப்படுகிறது. ஏற்கனவே, இதேபோல் கார் பரிசு பெற்ற வீரர்கள் அதை வைத்து எந்த அளவு வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றனர்; எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை ஆராய வேண்டும். வீரர்களுக்கு உழவுத்தொழில் தொடர்பான கருவிகளை பரிசாக அளித்தால், வாழ்வில் முன்னேறி அவர்களே கார் வாங்கிக் கொள்வர்.வருஷா வருஷம் நீங்களும் சொல்லிட்டே தான் இருக்கீங்க... இவங்களும் கார், பல்சர் பைக்கை தான் தருவோம்னு அடம் பிடிக்கிறாங்களே!



தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி: 'சனாதன தர்ம சாஸ்திரங்களின் படி, ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என, புரி சங்கராச்சாரியார் கூறியதற்கு, கவர்னர் ரவி பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து, அவர் திருவள்ளுவர் பற்றி பேசுவது, பிரதமர் மோடி, சங்கராச்சாரியார்கள் குறித்த சனாதன சர்ச்சையை திசை திருப்பும் முயற்சி என்பது அனைவருக்கும் தெரியும். பிரச்னையை திசை திருப்பும் வித்தையை, உலகிற்கு அறிமுகம் செய்தவர்களே தி.மு.க.,வினர் தானே... அதனால தான் எல்லாரையும் அப்படியே பார்க்குறாங்களோ?



பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி: டில்லியில் அமைச்சர் உதயநிதி, மோடி காலில் தனியாக விழுந்து, 'அய்யா எங்கள காப்பாத்துங்க; நாங்க செய்ததெல்லாம் தப்பு'ன்னு தெரிவித்து விட்டார். முதல்வர் ஸ்டாலின், திருச்சியில், மோடியிடம், 'நாங்க எந்த தப்பும் பண்ண மாட்டோம். பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொள்கிறோம்' என, தெரிவித்து விட்டார்.இவங்க கட்சியை வழி நடத்தியவர்கள், பா.ஜ.,விடம் இப்படித் தான் சரண்டர் ஆனதா சொல்வாங்க... அதே மாதிரி தான் தி.மு.க.,வுக்கும் நடந்திருக்கும்னு குத்து மதிப்பா அடிச்சு விடுறாரா?



கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலர் ஈஸ்வரன் பேட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு வழங்கியது மகிழ்ச்சி. நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டியும் வழங்கி இருந்தால் சிறு விவசாயிகள் பயன் அடைந்திருப்பர். பொங்கல் தொகுப்பில் மண்பானை வழங்காதது வருத்தமாக உள்ளது.லோக்சபா தேர்தலுக்காக தான் பொங்கல் தொகுப்பு கொடுத்தாங்க... அடுத்த வருஷம் தேர்தல் எதுவும் இல்லைங்கிறதால, பொங்கல் வைக்க அரிசி கூட தர மாட்டாங்க!



தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: புதிய கல்வி கொள்கையின்படி, ஆஸ்திரேலியாவின், 'டீக்கின் பல்கலை' குஜராத்தில் துவக்கப்பட்டுள்ளது. பல கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் கால் பதிக்க உள்ளன. தமிழக அரசு மெத்தனமாக, தன் தவறான கொள்கை பிடிப்பில் இருந்து விலக வில்லையெனில், கல்வித்துறையில் தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்னுக்கு தள்ளி, பெரும் முன்னேற்றத்தை சந்திக்கும் என எச்சரிக்கிறேன்.'அன்னிய பல்கலைக் கழகங் கள் எங்களுக்கு தேவையில்லை; தமிழக பல்கலையை வச்சே நாங்க முன்னேறிடுவோம்'னு சொன்னாலும் சொல்வாங்க!






      Dinamalar
      Follow us