sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: திருச்செந்துார், ராமேஸ்வரம், பழனி கோவில்களில் பக்தர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக வெளியாகும் செய்திகள், மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைத்திருக்கும் அறநிலைய துறையின் அலட்சியம் கடும் கண்டனத்துக்கு உரியது. கோவில்களில் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் வகையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்.

'கோடை வெயில்ல கோவிலுக்கு போகாதீங்க'ன்னு சொன்னாலும் சொல்வாங்களே தவிர, வசதிகளை ஏற்படுத்தி தரவே மாட்டாங்க!

மா.கம்யூ., கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேச்சு: மதுரையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள எங்கள் கட்சியின் மாநாட்டிற்காக, வீடு வீடாக சென்று உழைப்பாளி மக்களிடம் இருந்து நிதி பெற்றுள்ளோம். ஆனால், பா.ஜ., அரசு, 10 ஆண்டுகளில், 16 லட்சம் கோடி ரூபாய் கடனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்து, அவர்களிடம் இருந்து நிதி பெற்றுள்ளது.

அது சரி... இன்னுமா, இந்த ஊரு இவங்க கட்சியை நம்பி நிதி எல்லாம் தருது?



தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேச்சு: கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போதைய, 543 லோக்சபா இடங்கள்தக்க வைக்கப்பட்டு மறுபங்கீடு செய்யப்பட்டால், தமிழகமானது, எட்டு தொகுதிகளை இழக்க நேரிடும். அதேசமயம் உ.பி., மற்றும் பீஹார் ஆகியவை கூட்டாக, 21 இடங்களை கூடுதலாக பெறும். இது, நம் தேசிய லட்சியத்தில் உறுதியாக இருக்கும் மாநிலங்களுக்கு எதிரான அரசியல் சதி என்பதை தவிர வேறொன்றும்இல்லை. தொகுதி மறுசீரமைப்பு பற்றி பார்லிமென்டில் பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

பிரதமர் மோடி விளக்கம் தந்துட்டா மட்டும், உடனே ஏத்துக்க போறாங்களா...? அதுக்கும் வியாக்கியானம் பேசவே செய்வாங்க!

சென்னை மாநகராட்சி காங்., கவுன்சிலர் சுகன்யா செல்வம் அறிக்கை: சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. குழந்தைகளையும், பெரியவர்களையும் கடித்து, அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. எனவே, கருத்தடை செய்யப்படாத நாய்களுக்கு கூடிய விரைவில் கருத்தடை செய்து, அதற்கென ஒரு காப்பகம் அமைத்து, அதில் நாய்களை பராமரிக்க, மேயர் பிரியா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'நாய் படும் பாடு' என்பதை, 'நாயால படாத பாடு படும்'னு மாத்தி சொல்லணும் போலிருக்கே!






      Dinamalar
      Follow us