Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஏப் 05, 2026 02:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026 02:28 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி பேட்டி: நான் எங்கோ மண் குவாரியில் தவறு செய்ததாக, பழிவாங்க வேண்டும் என்ற உணர்வோடு, 2012ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் என் மீது வழக்கு போடப்பட்டது. 2021ல் எங்கள் ஆட்சி வந்தபோதும், வழக்கை முடிக்காமல் தொடர்ந்து நடத்தி, பொய் வழக்கு என்பதை நிரூபிக்கும் வகையில், தற்போது நீதிபதி என்னை விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அ.தி.மு.க., ஆட்சியில் போட்ட வழக்கு என்பதை, நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக நிரூபித்துள்ளது. அவசரப்பட்டு சந்தோஷப்பட வேண்டாம்... தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு போகவும் வாய்ப்பிருக்கு!

கே.வி.குப்பம் தொகுதியில், அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேச்சு: தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க., ஆட்சியை ஒழிக்க வேண்டும். பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். அதற்கு, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் மக்கள் ஓட்டளித்து, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

உங்க கட்சிக்கு ஐந்து சீட்கள் கேட்டு அடம் பிடிச்சு, கடைசியில் உங்க ஒருத்தருக்கு மட்டும் சீட் வாங்கியிருக்கீங்களே... கோஷம் போட மட்டும் தான் உங்க கட்சியினரை கூட வச்சிருக்கீங்களோ? சிவகங்கை தொகுதியில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும்,

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் பேட்டி: என் மகன் நடிகர் கென்னுக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எனக்கு பிரசாரம் செய்து தான், நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளேன். தி.மு.க., அரசின் நல்ல திட்டங்களால், சிவகங்கை தொகுதி மக்கள் எனக்கு ஓட்டளிப்பர்.

சொந்தமாக கட்சி நடத்திட்டு, மற்ற கட்சி சின்னத்தில் நிற்பதற்கு பதிலாக, அந்த கட்சியிலயே சேர்ந்துடலாமே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு: ஜோலார்பேட்டை தொகுதியில், என் வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் அருகிலேயே போதைப் பொருட்கள் சாதாரணமாக கிடைக்கின்றன. தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள், தி.மு.க.,வினர். விரைவில் அ.தி.மு.க., ஆட்சி அமையும்.

கடந்த, 2021 தேர்தலில் தோற்ற பின், இவரை எங்கயும் பார்க்க முடியலை... சரியா, தேர்தல் நேரத்தில் வேட்பாளராகி தலையை காட்டுறாரே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us