sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

முருங்கை, தர்பூசணி சாகுபடியில் ரூ.3.40 லட்சம் லாபம்!

/

முருங்கை, தர்பூசணி சாகுபடியில் ரூ.3.40 லட்சம் லாபம்!

முருங்கை, தர்பூசணி சாகுபடியில் ரூ.3.40 லட்சம் லாபம்!

முருங்கை, தர்பூசணி சாகுபடியில் ரூ.3.40 லட்சம் லாபம்!


PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கை முறையில் செடி முருங்கை மற்றும் தர்பூசணி சாகுபடி செய்து, நிறைவான லாபம் சம்பாதிக்கும், அரியலுார் மாவட்டம், காடுவெட்டி அருகே உள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன்: இது தான் என் சொந்த ஊர்.

நாங்கள் விவசாய குடும்பம். டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்ததும், துபாய் சென்று, தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன்; நல்ல சம்பளம் கிடைத்தது. ஆனாலும், அங்குள்ள வாழ்க்கை சூழல் பிடிக்காமல், 2019ல் சொந்த ஊருக்கு திரும்பி, விவசாயத்தில் இறங்கி விட்டேன்.

முதலில், பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்தேன். அதன்பின், 2020ல், 1 ஏக்கரில் செடி முருங்கை பயிர் செய்து, அதில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி செய்தேன். நான் எதிர்பார்த்ததை விடவும் நல்ல லாபம் கிடைத்தது. 1 ஏக்கர் செடி முருங்கையில் ஊடுபயிராக சாகுபடி செய்ததில், இந்த ஆண்டு, 10 டன் தர்பூசணி பழங்கள் கிடைத்தன.

தர்பூசணி பழங்களில், ஊசி வாயிலாக ரசாயன மருந்து செலுத்தப்படுவதாக வதந்தி கிளம்பியதால், 'இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்த தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு... 1 கிலோ, 10 ரூபாய்' என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதில், பலரும் என்னை தொடர்பு கொண்டனர். 5 டன் பழங்கள் விற்பனை செய்தேன்; 50,000 ரூபாய் கிடைத்தது.

மீதி, 5 டன் பழங்களை விற்பனை செய்ய, வாடகைக்கு ஒரு சரக்கு வாகனம் பிடித்தேன். 'இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழம், 1 கிலோ, 20 ரூபாய்' என்று போஸ்டர் தயார் செய்து, அந்த வாகனத்தில் ஒட்டினேன். ஒலிபெருக்கி வாயிலாக நானே நேரடியாக விளம்பரம் செய்து, ஊர் ஊராக சென்று விற்பனை செய்தேன். இந்த, 5 டன் பழங்கள் விற்பனை வாயிலாக, 1 லட்சம் ரூபாய் கிடைத்தது. மொத்தம், 10 டன் பழங்கள் விற்பனையில் எல்லா செலவுகளும் போக, இந்தாண்டு, 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.

செடி முருங்கையை பொறுத்தவரைக்கும், ஆண்டுக்கு, 4.50 டன் வீதம் இரண்டு முறை மகசூல் கிடைக்கும். சராசரியாக கிலோ, 30 ரூபாய் வீதம், 4.5 டன் காய்கள் விற்பனை வாயிலாக, 1.35 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆண்டுக்கு, 9 டன் காய்கள் விற்பனை மூலம், 2.70 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

வியாபாரிகள், எ ன் தோட்டத்திற்கே நேரடியாக வந்து வாங்கிச் செல்வதால், போக்குவரத்து செலவு மிச்சம். சாகுபடி மற்றும் அறுவடை செலவுகள் போக, 2.40 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. தர்பூசணி விற்பனையையும் சேர்த்து, மொத்தம், 3.40 லட்சம் ரூபாய் லாபம் கிடைத் துள்ளது. சமயோசிதமாக செயல்பட்டால், விவசா யத்தில் சாதிக்கலாம்!

தொடர்புக்கு:87600 05420






      Dinamalar
      Follow us