தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ கட்சி கொடிகள் தயாரித்து விற்பனை செய்கிறோம்!

 கட்சி கொடிகள் தயாரித்து விற்பனை செய்கிறோம்!

 கட்சி கொடிகள் தயாரித்து விற்பனை செய்கிறோம்!


PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்சி கொடிகளை தயாரித்து விற்பனை செய்து வரும், கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார்:

நான் சார்ந்திருக்கும் கட்சி, 10 ஆண்டுகளுக்கு முன் பிரபலமான கட்சியாக இருக்கவில்லை. கார்களுக்கு பயன்படுத்தும் அக்கட்சியின் கொடி, எல்லா ஊர்களிலும் கிடைக்காது. ஈரோட்டில் ஒரே ஒரு இடத்தில் தான் கிடைக்கும்.

அதனால், நானே கொடி தயாரிப்பை செய்து பார்க்கலாம் என்று துவங்கியது தான், 'உமையா பிளக்ஸ்' என்ற கொடி தயாரிப்பு நிறுவனம். இப்போது எங்களிடம், 20 பேர் பணிபுரிகின்றனர்.

எங்களுக்கு நாடு முழுதும், 11,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

காரின் உள்ளே முகப்பில் வைக்கும் சிறிய கொடிகள் முதல், 40 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கொடிகள் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

முக்கிய அரசியல் கட்சிகளின் விழாக்களிலும், முக்கியஸ்தர்களின் கார்களிலும் பறக்கும் பெரும்பாலான கொடிகள் எங்கள் நிறுவன தயாரிப்பு தான்.

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினோம். தரமான கொடிகளை உருவாக்க மிகவும் மெனக்கெட்டோம். சில லட்சம் ரூபாய் நஷ்டமானது. இருந்தாலும் மனம் தளராமல், தொடர்ந்து முயற்சித்து, நல்ல தரத்தை கொண்டு வந்தோம்.

முதலில், நாங்கள் சார்ந்த கட்சிக்கான கொடிகளை தயாரிக்க ஆரம்பித்தோம். 'உங்கள் கொடி நன்றாக இருக்கிறது.

அதேபோல எங்களுக்கும் செய்து தாருங்கள்' என்று மற்ற கட்சியினரும் கேட்கவே, அப்படியே வளர்ந்தது எங்கள் வியாபாரம். தற்போது சிறிய கட்சிகளின் கொடி கூட எங்களிடம் கிடைக்கும்.

பல மாநிலங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் கொடிகளையும் தயாரிக்கிறோம். மாதந்தோறும் கார்களுக்கான, 10,000 கொடிகளை தயாரிக்கிறோம்.

அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பெரும்பாலும் எங்களது கொடி தயாரிப்புகளை விரும்பி பயன்படுத்துகின்றனர். இந்த வியாபாரம் வாயிலாக மாதந்தோறும், 40 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.

கொடி தயாரிப்பில் தென்மாநிலங்கள் அளவில் முதலிடத்திலும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறோம். அடுத்த ஓராண்டில், இந்திய அளவிலும் முதலிடம் பிடிப்பதை இலக்காக வைத்து செயல்படுகிறோம்.

தேர்தல் நேரத்தில், கட்சி கொடிகள் அதிகமாக விற்பனையாகும் என்றாலும், கட்சி நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு பயன்படுத்தும் கொடிகளுக்கான தேவை, ஆண்டு முழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

கார்களுக்கு பயன்படுத்தும் கொடிகள் தயாரிப்பு தான் எங்களது தனிச்சிறப்பு. தற்போது, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வர்த்தகம் செய்ய துவங்கி இருக்கிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us