/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; அரசு அலுவலக வளாகங்களுக்கு கம்பி வேலி அமைக்கப்படுமா?

ADDED : செப் 24, 2025 09:25 PM
அரசு அலுவலக வளாகங்களுக்கு கம்பி வேலி அமைக்கப்படுமா?
தி ருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி, ஐந்தாவது வார்டில், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ரேஷன் கடை, மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளன.
திறந்த நிலையில் இருப்பதால், இந்த வளாகத்தில் வெளிநபர்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி, இந்த வளாகத்திற்கு கம்பி வேலி அமைக்க வேண்டும்.
அதேபோல ஐந்தாவது வார்டில், சமத்துவபுரம் குடியிருப்பு அருகே கிராம சேவை கட்டடம், விளையாட்டு மைதானம் அடுத்தடுத்து அமைந்துள்ளன. புதிய அங்கன்வாடி மையமும், சற்று தள்ளி தனியாக அமைந்துள்ளது.
மேற்கண்ட வளாகங்களுக்கும் பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும்.
-செல்வம், மாம்பாக்கம்