/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
பிளாட்பார்மில் நாய்கள்; பயணியர் அச்சம்
/
பிளாட்பார்மில் நாய்கள்; பயணியர் அச்சம்
ADDED : ஜூன் 30, 2025 10:32 PM

சாய்ந்த பிளக்ஸ்
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் நிழற்கூரை அருகே, நடப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் காற்றுக்கு கீழே சாய்ந்த நிலையில் இருக்கிறது. இதனால், அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாய்ந்த பிளக்ஸ்சை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- சரவணன், கிணத்துக்கடவு.
பஸ் வரும் நேரம் தெரியல
கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால், பஸ் வரும் நேரம் தெரியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்க, பஸ் வரும் நேரம் குறித்த பெயர் பலகையை பஸ் ஸ்டாண்டின் உள்பகுதியில் மக்கள் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும்.
-- செந்தில், கிணத்துக்கடவு.
ரோட்டில் கால்நடைகள்
வால்பாறை முக்கிய பகுதிகளில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ரோட்டில், கால்நடைகள் கட்டுப்பாடின்றி சுற்றுவதால், நடந்து செல்பவர்கள் முதல் வாகனங்களில் செல்பவர்கள் வரை பலர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
-- கவுதம், வால்பாறை.
ரோட்டோரத்தில் புதர்
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் செல்லும் ரோட்டின் வளைவு பகுதியில், அதிகளவு புதர் சூழ்ந்து இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டோர புதர்களை அகற்றம் செய்ய வேண்டும்.
-- மணிகண்டன், கிணத்துக்கடவு.
பஸ் ஸ்டாண்டில் பள்ளம்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பஸ் செல்லும் பாதையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இவ்வழியாக செல்ல சிரமம் ஏற்படுகிறது. இவ்வழியாக நடந்து செல்லும் பயணியரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-- டேனியல், பொள்ளாச்சி.
பாதுகாப்பில்லை!
பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியின், சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால், வழிப்போக்கர்கள் பள்ளி மைதானத்தினுள் இரவு நேரத்தில் நுழைகின்றனர். மாணவ, மாணவியர் பாதுகாப்பு கருதி, இடிந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.
-- அருண்குமார், ஜமீன் ஊத்துக்குளி.
பிளாட்பார்மில் நாய்கள்
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் நாய்கள் படுத்திருக்கின்றன. இதனால், அங்கு நடந்து செல்லும் பயணியர் அச்சமடைகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
வாகன ஓட்டுநர்கள் அச்சம்
கணக்கம்பாளையம் ஓலப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிக்கிறது. இரவு நேரங்களில் தெருநாய்கள் வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வகையில் துரத்திச்செல்கின்றன. குடியிருப்புகளின் முன் கூட்டமாக கூடி விடுவதால், வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
- ராதா, கணக்கம்பாளையம்.
பள்ளத்தை சரிசெய்யுங்க
உடுமலை, ஸ்ரீநகர் பாலம் அருகே ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. பிரதான ரோட்டிலிருந்து பாலம் ஏறும் வாகனங்களும் பள்ளித்தில் தடுமாறுகின்றன. மழை நாட்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் வாகன ஓட்டுநர்கள் அதிகமாக விபத்துக்குள்ளாகின்றனர்.
- சிவக்குமார், உடுமலை.
'குடி'மகன்கள் தொல்லை
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அனுசம் ரோட்டில், 'குடி'மகன்கள் இரவு நேரங்களில் நிதானம் இல்லாமல் ரோட்டில் அங்கும் இங்குமாக சுற்றுகின்றனர். அப்பகுதியில் போதிய வெளிச்சமும் இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் அவ்வழியாக செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.
- கார்த்திகேயன், உடுமலை.
ஒளிராத தெருவிளக்குகள்
உடுமலை, ஜி.டி.வி., லே-அவுட்டில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இருள் சூழ்ந்திருப்பதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பணி முடிந்து வருவோரும் திருட்டு பயத்துக்கு அச்சப்படுகின்றனர். அப்பகுதியினர் பாதுகாப்பாக சென்றுவருவதற்கு தெருவிளக்குகளை நகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.
- சாமிநாதன், உடுமலை.
கடைகளுக்கு ஆபத்து
உடுமலை பஸ் ஸ்டாண்டில் கடைகளின் மேற்பகுதி சேதமடைந்து செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இச்செடிகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வகுமார், உடுமலை.