sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கோயம்புத்தூர்

/

ரோடெல்லாம் பள்ளங்கள்; வாடிக்கையானது விபத்துக்கள்!

/

ரோடெல்லாம் பள்ளங்கள்; வாடிக்கையானது விபத்துக்கள்!

ரோடெல்லாம் பள்ளங்கள்; வாடிக்கையானது விபத்துக்கள்!

ரோடெல்லாம் பள்ளங்கள்; வாடிக்கையானது விபத்துக்கள்!


ADDED : ஜூன் 23, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆறாய் ஓடும் குடிநீர்


போத்தனுார் மெயின் ரோடு, நேரு வீதியில், குடிநீர் குழாய் உடைந்திருப்பதால் தண்ணீர் வீணாகிறது. ஒரு வாரத்துக்கு மேல் ஆறு போல் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளிடம் புகார் செய்தும் குழாய் உடைப்பை இன்னும் சரிசெய்யவில்லை.

- கார்த்திக், போத்தனுார்.

குறுக்கே ஓடும் குதிரைகள்


துடியலுார் அருகே ஜி.என்., மில்ஸ் முதல் கே.என்.ஜி., புதுார் வரை, குதிரைகள் அதிகளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. சாலையின் குறுக்கே திடீரென ஓடும் குதிரைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதால் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலச்சந்தர், துடியலுார்.

சாலையெல்லாம் பள்ளங்கள்


வெள்ளக்கிணறு - சமத்துவபுரம் செல்லும் சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பெரும்பாலான வாகனங்கள் இந்த வழியே செல்கின்றன. விரைந்து சாலையை செப்பனிட வேண்டும்.

- ராஜா, வெள்ளக்கிணறு.

கடும் துர்நாற்றம்


மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம் சாலையில் உள்ள கழிவுநீர் வடிகால் சரியாக சுத்தம் செய்யவில்லை. கால்வாயில் மண் மற்றும் பிளாஸ்டிக் கவர், பாட்டில் உள்ளிட்ட குப்பை அடைத்து நிற்கிறது. இதனால், இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- சம்பத்குமார், மதுக்கரை.

பள்ளத்தால் விபத்து


வேளாண் பல்கலை அடுத்து லாலி ரோடு சந்திப்புக்கு முன்பாக சாலையோரம் பெரிய பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். விரைந்து பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

- உன்னிகிருஷ்ணன், ஆர்.எஸ்.,புரம்.

குழாய் உடைப்பு


இடையர்பாளையம், 93வது வார்டு, மதுரை வீரன் கோவில் வீதியில் மூன்று மாதமாக தண்ணீர் குழாய் உடைந்து சிறிது, சிறிதாக தண்ணீர் வீணாகிறது. சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுப்பெருக்கம் அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது.

- சந்தானம், இடையர்பாளையம்.

சேதமடைந்த மின்கம்பம்


சூலுார், போகம்பட்டி கிராமத்தில், போகம்பட்டி பொன்னாக்கானி மெயின் ரோட்டில், இரண்டு ஆண்டுகளாக மின்கம்பம் ஒன்று மோசமானநிலையில் சேதமடைந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- பாரதி, சூலுார்.

சீரமைக்கப்படாத ரோடு


வடவள்ளி, தொண்டாமுத்துார் ரோட்டில் உள்ள ஜி.கே.எஸ்., அவென்யூ பேஸ் - 2 வில், ஆறு மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தபின் சாலையை முறையாக சீரமைக்கவில்லை. மண் சாலை முழுவதும் குழிகளாக உள்ளது. குழிகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உளளது.

- ஸ்ரீதர், வடவள்ளி.

விழும் நிலையில் கம்பம்


மதுக்கரை மெயின் ரோடு, 94வது வார்டு, அன்னை இந்திரா நகர் முதல் வீதியில் உள்ள 'எஸ்.பி - 33, பி -9' என்ற எண் கொண்ட கம்பம் மிகவும் சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. சேதமடைந்த கம்பத்தை மாற்றித்தர வேண்டும்.

- கண்ணம்மாள், மதுக்கரை.

சாக்கடையில் வீணாகும் குடிநீர்


வேடப்பட்டி, 12வது வார்டு பகுதியில் குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் வீணாகிறது. குடிநீர் விநியோகத்தின் போது குறைந்தது மூன்று மணி நேரமாவது தண்ணீர் வெளியேறி, சாக்கடையில் கலக்கிறது. பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை.

- கோகுல்குமார், வேடப்பட்டி.

தெருவிளக்கு பழுது


சரவணம்பட்டி, நான்காவது வார்டு, அண்ணா நகரில், 'எஸ்.பி -30, பி -10' என்ற எண் கொண்ட கம்பத்தில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் தெருவிளக்கு பழுதை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

- நீலகண்டன், சரவணம்பட்டி.

குப்பை தேக்கம்


குனியமுத்துார், 87வது வார்டு, அம்மன் கோவில் ரோட்டில் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. வீடுகளுக்கு துாய்மை பணியாளர்கள் முறையாக குப்பை சேகரிக்க வராததால், திறந்தவெளியில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. பிளாஸ்டிக் பையில் கட்டி, மூட்டை மூட்டையாக வீசிச்செல்கின்றனர்.

- ரக்மத், குனியமுத்துார்.






      Dinamalar
      Follow us