நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா ?
அரகண்டநல்லுாரில் உள்ள திருக்கோவிலுார் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும்.
-கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி.
சாலை ஆக்கிரமிப்பால் பாதிப்பு
தியாகதுருகம் முக்கிய சாலையோரங்களில் தள்ளுவண்டிகளை வைத்து சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்.
-மீனாட்சி சுந்தரம், தியாகதுருகம்.
வழிகாட்டி பலகை இல்லாததால் அலைச்சல்
சின்னசேலத்தில், சேலம் பிரதான சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் எந்த ஒரு வழிகாட்டி பலகையும் வைக்காததால், புதிதாக ரயில் நிலையம் வருபவர்களுக்கு அலைச்சல் ஏற்படுகிறது.
-இதயம் பாண்டியன், பாண்டியங்குப்பம்.