
ரவுண்டாணாவில் விபத்து
எஸ்.குளத்துார் ரவுண்டாணா பகுதியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அதிகரித்து வருகின்றன.
-மணி, எஸ்.குளத்துார்.
பாதுகாப்பற்ற வேலி
மாத்துார், கந்தசாமி கோவில் குளத்தில் சேதமடைந்த பாதுகாப்பு வேலிகளால் சிறுவர்கள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
-கருப்பன், மாத்துார்.
பொதுக்கழிவறை தேவை
மண்மலை கிராமத்தில் மகளிருக்கான பொது கழிவறை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள், மண்மலை.
உழவர் சந்தையில் அவதி
கள்ளக்குறிச்சியில் தற்போது இயங்கும் உழவர் சந்தை போதிய இட வசதி இல்லாததால், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-பிரேம், கள்ளக்குறிச்சி.
குப்பையால் சுகாதார சீர்கேடு
சின்னேசலம் அடுத்த கனியாமூர் கோமுகி ஆறு, கோடை பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-பிரபாகரன், கனியாமூர்.
வாகன ஓட்டிகள் அச்சம்
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
-சந்துரு, பங்காரம்.