/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையோரம் மின் கம்பங்கள் சேதம்

ADDED : மே 27, 2025 01:15 AM

வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் வழியாக, 18 கி.மீ., துாரம் கீழச்சேரி வரை நான்குவழிச் சாலை உள்ளது.
குண்ண கிராமத்தில் இருந்து, சிறுமாங்காடு வரையில் சாலையோர மின் கம்பங்கள் உள்ளன. இதில், மின் கம்பத்தின் மீதுகனரக வாகனம் மோதி கான்கிரீட் பெயர்ந்து முறிவுஏற்பட்டு, ஆபத்தாகவளைந்துள்ளது.
இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்,மின் கம்பம் எப்போது விழும் என, அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிஉள்ளது.
எனவே, சாலையோரம் சேதம் ஏற்பட்டிருக்கும் மின் கம்பங்களை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மாற்றம் செய்ய வேண்டும்.
- -பி.நாராயணன்,
ஸ்ரீபெரும்புதுார்.