
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆகாய தாமரை வளர்ந்துள்ள வரதராஜபுரம் ஏரி சீர்செய்யப்படுமா?
பூந்தமல்லி தாலுகா, வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள ஏரி, முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. இந்த ஏரியில் அகரமேல், நசரத்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், லாரிகளில் கழிவுநீரை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. இதை தடுக்க ஏரியில் உள்ள ஆகாய தாமரையை அகற்றி, சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாத்தால், நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருக்கும். பூந்தமல்லி ஒன்றிய அதிகாரிகள், ஏரியை நேரில் பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.