sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருப்பூர்

/

பீறிடும் தண்ணீர்... நாறிடும் நகரம்

/

பீறிடும் தண்ணீர்... நாறிடும் நகரம்

பீறிடும் தண்ணீர்... நாறிடும் நகரம்

பீறிடும் தண்ணீர்... நாறிடும் நகரம்


ADDED : ஜூன் 17, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆபத்தான மரம்

பொங்குபாளையம், ஏ.டி., காலனி, மாரியம்மன் கோவில் வீதியில் முற்றிலும் காய்ந்து விழும் நிலையில் வேப்பமரம் உள்ளது. விழும் முன் அகற்ற வேண்டும்.

- நாகராஜ், பொங்குபாளையம். (படம் உண்டு)

ஒளிராத விளக்கு

திருப்பூர், 26வது வார்டு, கொங்கணகிரி கோவில் வீதி - பிரேமா ஸ்கூல் வீதி சந்திப்பு மேற்கு வீதியில் ஒரு வாரமாக தெருவிளக்கு எரிவதில்லை.

- பழனிச்சாமி, காலேஜ் ரோடு. (படம் உண்டு)

அகலாத குப்பை

திருப்பூர், தாராபுரம் ரோடு, ெஷரீப் காலனி எக்ஸ்டன்சன், ஈஸ்வரமூர்த்தி நகர், நடுப்பங்குதோட்டம், குறிஞ்சி நகரில் தேங்கும் குப்பைகள் அகற்றப்படாமல், அப்படியே கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

- தனுஷ், குறிஞ்சி நகர். (படம் உண்டு)

திருப்பூர், மூன்றாவது வார்டு, பண்ணாரி அம்மன் நகர் - பிரியங்கா நகர் ரோட்டில் குப்பை தேங்கியுள்ளது. குப்பைகளை அள்ள வேண்டும்.

- சுப்ரமணி, பண்ணாரி அம்மன் நகர். (படம் உண்டு)

திருப்பூர், 43வது வார்டு, எருக்காடு மூன்றாவது வீதியில் குப்பை தேங்கியுள்ளது. கால்வாயில் நிறைகிறது. குப்பை அள்ள வேண்டும்.

- பழனிசாமி, எருக்காடு. (படம் உண்டு)

திருப்பூர், லட்சுமி நகர், முல்லை வீதி கார்னரில் குப்பை அகற்றாமல் அப்படியே உள்ளது. வாகனங்கள் சென்று வர வழியில்லை. குப்பை அள்ள வேண்டும்.

- முத்துக்குமார், முல்லை நகர். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

திருமுருகன்பூண்டி முதல் வார்டு நெசவாளர் காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

- மனோகர், அண்ணா காலனி. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லுார், பிரபு நகரில் குழாய் உடைந்து தண்ணீர் தினசரி சாலையில் வீணாகிறது. சாலையும் சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- மணிமேகலை, பிரபுநகர். (படம் உண்டு)

திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜவஹர் நகர் முதல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறுகிறது. உடைப்பு மேலும் பெரியதாகும் முன், சரிசெய்ய வேண்டும்.

- கார்த்தி, ஜவஹர் நகர். (படம் உண்டு)

திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் பிரிவு, குளத்துப்புதுார் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.

- ரத்தினசாமி, குளத்துப்புதுார். (படம் உண்டு)

ரியாக் ஷன்

தற்காலிக சீரமைப்பு

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் கடக்கும் சாலை குழியாக இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தற்காலிகமாக குழிக்கு மண் கொட்டியுள்ளனர்.

- சங்கர்சதீஷ், புதுராமகிருஷ்ணாபுரம். (படம் உண்டு)

குப்பைகள் மாயம்

திருப்பூர், ஜெய்வாபாய் ஸ்கூல் வீதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் குப்பை தேங்கியிருப்பதாக செய்தி வெளியானது. அவ்விடத்தில் இருந்து குப்பை அள்ளப்பட்டு விட்டது.

- சத்யன், குமரன் ரோடு (படம் உண்டு)

ஒளிர்கிறது விளக்கு

பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி மீனாம்பாறையில் தெருவிளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. தெருவிளக்கு மாற்றி விட்டனர்; தற்போது பளிச்சிடுகிறது.

- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு)

இருக்கைகள் மாற்றம்

கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப் நிழற்குடையில் போஸ்டர் ஓட்டி, அசுத்தம் செய்திருந்தனர். இருக்கைகள் உடைந்திருந்தது. செய்தி வெளியானதும், இருக்கை மாற்றப்பட்டுள்ளது. சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு, துாய்மைப்படுத்தப் பட்டுள்ளது.

- செல்வராஜ், பல்லடம் ரோடு. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us