/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கரூரில் நாளை தி.மு.க., முப்பெரும் விழா அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு
/
கரூரில் நாளை தி.மு.க., முப்பெரும் விழா அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு
கரூரில் நாளை தி.மு.க., முப்பெரும் விழா அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு
கரூரில் நாளை தி.மு.க., முப்பெரும் விழா அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு
PUBLISHED ON : செப் 16, 2025 12:00 AM
கரூர் நாளை நடக்கும் முப்பெரும் விழாவிற்கு, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு அருகில் நாளை (17ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்பட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், கட்சி நிர்வாகிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
விழாவில், துணை பொதுச்செயலர் கனிமொழிக்கு-பெரியார் விருது, பாளையங்கோட்டை முன்னாள் நகராட்சி தலைவர் சீதாராமனுக்கு- அண்ணா விருது, அண்ணாநகர் முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரனுக்கு - கலைஞர் விருது வழங்கப்படுகிறது. மேலும், தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலையை சேர்ந்த மறைந்த சிவராமனுக்கு - பாவேந்தர் விருது, சட்டசபை முன்னாள் கொரடா மருதுார் ராமலிங்கத்துக்கு- பேராசிரியர் விருது, முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமிக்கு - ஸ்டாலின் விருது வழங்கப் படுகிறது.எனவே கரூர் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., கிளை நிர்வாகிகள், அணி சார்ந்த அமைப்பின் நிர்வாகிகள்,
உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.