Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜன 23, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 23, 1967

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடியில், 1890, மே 19ல், திருவேங்கடம் அய்யங்கார் - செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், ராமானுஜ அய்யங்கார்.

இவரது தந்தை, இவர் ஜாதகத்தை பார்த்து, சங்கீதத்தில் புகழ்பெற வாய்ப்புள்ளதைக் கணித்து, புதுக்கோட்டை மலையப்ப அய்யர், நாமக்கல் நரசிம்ம அய்யங்கார் உள்ளிட்டோரிடம் சங்கீதம் கற்க அனுப்பினார். இவர் தன், 16வது வயதில், ராமநாதபுரம் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் கச்சேரியை கேட்டு மயங்கி, அவரிடம் சிஷ்யனாக சேர்ந்தார்.

காரைக்குடி சகோதரர்களிடம் வீணை இசைக்கவும் கற்றார். வீணை தனம்மாள் பாணியில், பாடல்களையும் இயற்றி பாடினார். வர்ணம், பாடல்கள், சிறுராக ஆலாபனை, நிரவல், ஸ்வரங்கள் எனும் புதிய பாட்டு பாணியை அறிமுகம் செய்தார்.

தன் கச்சேரிகளில், திருப்புகழ், ஆண்டாள் திருப்பாவை, அருணாச்சல கவிராயர் பாடல்களை கட்டாயம் இடம்பெற செய்தார். 'பத்மபூஷன்'உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர், 1967ல், தன் 77வது வயதில் இதே நாளில் மறைந்தார்.

தன் ஊர் பெயரை, இசையால் உலகறிய செய்த, 'அரியக்குடியார்' மறைந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap