/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக 35.50 லட்சம் வேட்டி, சேலை உற்பத்திக்கு உத்தரவு
/
முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக 35.50 லட்சம் வேட்டி, சேலை உற்பத்திக்கு உத்தரவு
முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக 35.50 லட்சம் வேட்டி, சேலை உற்பத்திக்கு உத்தரவு
முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக 35.50 லட்சம் வேட்டி, சேலை உற்பத்திக்கு உத்தரவு
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM
ஈரோடு, :முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக, (ஓ.ஏ.பி.,), 35.50 லட்சம் இலவச சேலை, வேட்டி உற்பத்திக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது, அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை உற்பத்தியுடன், ஓ.ஏ.பி.,க்கான வேட்டி, சேலையையும் இணைத்து உற்பத்தி செய்து பிரித்து வழங்குவர். தவிர, முன்பு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது ஓ.ஏ.பி., பெறுவோருக்கு ஆண்டுக்கு, 2 செட் இலவச வேட்டி அல்லது சேலை வழங்குவர். கடந்தாண்டு முதல் தீபாவளிக்கு மட்டும் வழங்கும் முறையை கொண்டு வந்தனர்.
தற்போது 'தமிழ்நாடு ேஹண்ட்லுாம் வீவர்ஸ் கோஆப்ரேட்டிவ் சொசைட்டி' சார்பில், 25 லட்சத்து, 54,792 சேலைகள், 9 லட்சத்து, 95,611 வேட்டிகள் உற்பத்திக்கு உத்தரவிட்டுள்ளது.
சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதி கைத்தறி உதவி இயக்குனரின் கீழ் உள்ள சொசைட்டிகள் மூலம், உற்பத்தி செய்து வழங்க உள்ளனர். சேலை, 45 இன்ச் அகலம், 5.5 மீட்டர் நீளம், வேட்டி, 50 இன்ச் அகலம், 5.5 மீட்டர் நீளத்தில் உற்பத்தி செய்ய வேண்டும். இந்த உற்பத்தியை மே, 31க்குள் துவங்கி ஆக., 31க்குள் முடிக்க வேண்டும்.
இதுபற்றி, விசைத்தறியாளர்கள் கூறியதாவது:
கடந்தாண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு இலவச வேட்டி அல்லது சேலை வழங்கினர். தற்போது, தீபாவளிக்கு மட்டும் என குறைத்துள்ளதால் ஆண்டுக்கு, 35.50 லட்சம் சேலை மற்றும் வேட்டி உற்பத்தி குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் விசைத்தறியாளர்கள் வேலை இழக்கின்றனர்.
இதை மாற்றி முன்புபோல, இரண்டு முறை வழங்குவதுடன், இலவச வேட்டி, சேலை திட்டத்துடன் இணைத்து வழங்கினால், தரமான நுால் பெற்று உற்பத்தி செய்யலாம். இரண்டு முறை ஓ.ஏ.பி.,க்கு இலவச வேட்டி, சேலை வழங்கினால், 3,000 தறியில், 70 லட்சம் வேட்டி, சேலையை உற்பத்தி செய்தால், ஆறு மாதத்துக்கு தொடர்ந்து பணி கிடைக்கும்.
இவ்வாறு கூறினர்.

