PUBLISHED ON : மே 28, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த, சோகண்டி டாஸ்மாக் அருகே, கஞ்சா விற்பனை நடப்பதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை அங்கு சென்ற போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்களிடம் நடத்திய சோதனையில், கஞ்சா பொட்டளங்கள் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, திருமங்கங்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜய், 30, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த செளசின் டே, 26, நபா கிஷோர் சந்தார, 34 ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30,000 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

