PUBLISHED ON : செப் 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக ஓசோன் தினம்
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். ஓசோன் படலத்தை பாதுகாக்க 1987 செப்.16ல் கனடாவின் மான்ட்ரியல் நகரில் 'மான்ட்ரியல் ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதை குறிக்கும் விதமாக, ஓசோனை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1987 முதல் செப்., 16ல் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அறிவியலில் இருந்து உலக நடவடிக்கை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.