/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : மூங்கில், சம ஊதியம் தினம்
/
தகவல் சுரங்கம் : மூங்கில், சம ஊதியம் தினம்
PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
மூங்கில், சம ஊதியம் தினம்
மூங்கில்களுக்கு இயற்கையிலேயே பாக்டீரியா, பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி இருக்கிறது. வீடு கட்ட, ஏணிகள் செய்ய மூங்கில்கள் பயன்படுகின்றன. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மூங்கில் பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி செப்., 18ல் உலக மூங்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மூங்கிலில் 1400 வகை உள்ளன. ஆயுட்காலம் 60 ஆண்டுகள்.
* சம வேலைக்கான ஊதியம் அனைவருக்கும் சம அளவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 18ல் சர்வதேச சம ஊதிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.