தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/செல்லின் உள்ளே பார்க்க உதவும் புதிய நுண்நோக்கி!

செல்லின் உள்ளே பார்க்க உதவும் புதிய நுண்நோக்கி!

செல்லின் உள்ளே பார்க்க உதவும் புதிய நுண்நோக்கி!


PUBLISHED ON : ஜூன் 11, 2026 07:25 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2026 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை விஞ்ஞானிகள், உயிருள்ள செல்களின் உட்பகுதியை மிகத் துல்லியமாக ஆராய உதவும் சக்திவாய்ந்த புதிய நுண்நோக்கியை உருவாக்கியுள்ளனர். 'ஐ--ஐஎஸ்எம்' என அழைக்கப்படும் இந்தத் கருவி, செல்களுக்கு வண்ண ஒளியூட்டும் ரசாயனங்கள் ஏதுமின்றி, 120 நானோமீட்டர் அளவிலான மிகச்சிறிய பாகங்களையும் அணுஅணுவாகக் காட்டும் திறன் கொண்டது.

வழக்கமான உயர்-திறன் நுண்நோக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரசாயன லேபிள்கள் காலப்போக்கில் மங்கிவிடும் அல்லது செல்களின் இயல்பான செயல்பாட்டை மாற்றிவிடும். ஆனால், இரண்டு உருவப்படத் தொழில்நுட்பங்களைஇணைக்கும் இந்தப் புதிய முறை, செல்கள் மருந்துகள் அல்லது கிருமிகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.

மேலும், இது குறைந்த, அளவிலான ஒளியைப் பயன்படுத்துவதால், மென்மையான உயிருள்ள செல்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது. புற்றுநோய் மருந்துகள் செல்களுக்குள் எவ்வாறு நுழைகின்றன, மலேரியா கிருமிகள் ரத்தச் சிவப்பணுக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பனவற்றை ஆராய ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் இதனை ஏற்கனவே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பம் நோய்கள், மருந்து விநியோகம் மற்றும் தாவர-நுண்ணுயிரி தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல பெரிதும் உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us