தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/செவ்வாயில் உயிரி வேதியியல் ஆச்சரியம்

செவ்வாயில் உயிரி வேதியியல் ஆச்சரியம்

செவ்வாயில் உயிரி வேதியியல் ஆச்சரியம்

1


PUBLISHED ON : மே 07, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2026 07:50 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாசாவின் கியூரியாசிட்டி ஊர்தி, செவ்வாய்க் கோளின் பாறைகளை ஆய்வு செய்ததில், அங்கு இதுவரை அறியப் படாத சிக்கலான கரிம மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழ் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் பண்டைய வேதியியல் வரலாறு குறித்த புதிய விவாதங்களைத் துாண்டியுள்ளது.

உயிரிகளின் டி.என்.ஏ., தொடர்புடைய நைட்ரஜன் அடங்கிய வேதிப்பொருட்கள், செவ்வாயில் முன்பிருந்த ஏரி களிமண் பாறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. அண்டவெளியின் கதிர்வீச்சுத் தாக்குதலையும் மீறி, இக்களிமண் அடுக்குகள் மிகச் சிக்கலான கார்பன் மூலக்கூறுகளைப் பல கோடி ஆண்டுகளாகச் சிதையாமல் பாதுகாத்து வைத்திருப்பதை கியூரியாசிட்டி ஊர்தி கண்டறிந்துள்ளது.

அதற்காக, செவ்வாயில் உயிரினங்கள் இருப்பதற்கான நேரடிச் சான்று இது என்று பொருள் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஏனெனில், இத்தகைய மூலக்கூறுகள் புவியியல் மாற்றங்களாலும் விண்கல் தாக்குத ல்கள் வாயிலாகவும் உருவாகலாம். இருப்பினும், உயிர்கள் தோன்றுவதற்குத் தேவையான வேதியியல் சூழல் செவ்வாயில் நிலவியதை இது உறுதிப்படுத்துகிறது.

உயிரினங்களின் எஞ்சிய சுவடு களைச் செவ்வாய் இன்றும் தன்னுள் மறைத்து வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கையை இக்கண்டுபிடிப்பு வலுவாக்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us