Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/இதயம் காக்கும் இலை காய்கறிகள்

இதயம் காக்கும் இலை காய்கறிகள்

இதயம் காக்கும் இலை காய்கறிகள்


PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இலைகளை உடைய காய்கறிகளை உண்பது இதய நோய்களைக் குறைக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு. கீரை, பிராக்கலி, முட்டைக்கோஸ் முதலிய காய்கறிகளில் வைட்டமின் கே1 நிறைந்துள்ளது. இது இதயம், ரத்த நாளங்களை வலுப்படுத்தும். எனவே தினமும் இவற்றை உண்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகின் மிக முக்கியமான உடல் பிரச்னைகளில் ஒன்று இதயக் கோளாறு. ரத்த நாளங்களில் கொழுப்பு அடைக்கும்போது ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. பல உயிர்களை பறிக்கின்ற வாழ்வியல் முறை நோய் என்பதால் தான் இதை தடுக்கும் வழிகள் குறித்து உலகம் முழுக்க ஆய்வுகள் நடக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் உள்ள இசியு பல்கலையும், டேனிஷ் புற்றுநோய் மையமும் இணைந்து இது தொடர்பாக 14 ஆண்டுகள் ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சராசரியாக 75 வயதுடைய ஆஸ்திரேலிய பெண்கள் 1,436 பேரை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்கள் தினமும் தங்கள் உணவில் எவ்வளவு 'கே 1' வைட்டமின் எடுத்துக் கொள்கின்றனர் என்று தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதில் கே1 அதிகமாக உண்டவர்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்கள் தினமும் 120 மில்லி கிராமும், பெண்கள் 90 மில்லி கிராமும் கே1 வைட்டமின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கே1 வைட்டமின் ஒரு கப் கீரையில் 145 மில்லி கிராமும், அரை கப் பிராக்கலியில் 110 மில்லி கிராமும், அரை கப் முட்டைக்கோஸில் 82 மில்லி கிராமும் உள்ளது. எனவே தினமும் இவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான கே 1சத்து கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap