Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/நிலவில் மறைந்திருக்கும் நிலப்பரப்பு தழும்புகள்

நிலவில் மறைந்திருக்கும் நிலப்பரப்பு தழும்புகள்

நிலவில் மறைந்திருக்கும் நிலப்பரப்பு தழும்புகள்


PUBLISHED ON : மார் 05, 2026 07:29 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 05, 2026 07:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலவின் இருண்ட எரிமலைச் சமவெளிகளில் அமைந்துள்ள விரிசல்களை (Tectonic ridges) விஞ்ஞானிகள் முதன்முறையாக வரைபடமாக உருவாக்கியுள்ளனர். இது, ஆராய்ச்சியாளர்கள் முன்பு கணித்ததைவிட நிலாவின் நிலம் அதிகத் துடிப்போடு இருப்பதை உணர்த்துகிறது.

இவை ஆதிகால விண்கல் மோதலால் உருவான 'தழும்புகள்' அல்ல. அண்மைக் காலத்தில்தான், அதாவது, சில கோடி ஆண்டுகளுக்குள் இவை உருவாகியிருக்கலாம். நிலவு குளிர்ந்து சுருங்கும்போது ஏற்படும் புவியியல் மாற்றங்களே இவை.

பூமியைப் போல நகரும் தட்டுகள் (Tectonic plates) நிலவில் இல்லை. ஆனால், உட்புற வெப்ப இழப்பால் நிலவு மெல்லச் சுருங்குகிறது. இதனால் அதன் மேலோடு அழுத்தப்பட்டு முகடுகள் உருவாகின்றன. இத்தகைய முகடுகள் ஆயிரக்கணக்கில் கண்டறியப்பட்டுள்ளன.

இது, நிலவின் பரிணாம வளர்ச்சி மற்றும் அதன் உட்புற மாற்றங்கள் குறித்த புதிய புரிதலை விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளன.

இந்த முகடுகள் வெறும் நிலையான அமைப்புகள் அல்ல. விரிசல்களில் ஏற்படும் சிறிய நகர்வுகள்கூட 'நிலா நில அதிர்வு களை' (Moonquakes) உண்டாக்கு கின்றன. முன்பு இத்தகைய நில அதிர்வுகள் நிலவில் மிகவும் அரிதானவை என்று கருதப் பட்டது. ஆனால், தற்போதைய புதிய தரவுகளின்படி நிலவின் பரப்பெங்கும் இத்தகைய அதிர்வுகள் பரவலாக நிகழ்கின்றன.

எதிர்கால நிலவுப் பயணங்களுக்கும் அங்கு அமைக்கப்படவுள்ள மனித குடியிருப்புகளுக்கும் இது முக்கியமான எச்சரிக்கை. உயிரற்ற கோளாகக் கருதப்பட்ட நிலவில், இத்தகைய நில அதிர்வுகள் ஏற்படுவது, எதிர்காலக் கட்டுமானங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு மையங்களின் உறுதித்தன்மைக்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமையலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap