Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/பாலை கடைந்தால் கிடைக்கும் பிளாஸ்டிக்!

பாலை கடைந்தால் கிடைக்கும் பிளாஸ்டிக்!

பாலை கடைந்தால் கிடைக்கும் பிளாஸ்டிக்!


PUBLISHED ON : டிச 25, 2025 07:44 AM

Follow on Google

PUBLISHED ON : டிச 25, 2025 07:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று உண்டா? நாம் தினமும் அருந்தும் பாலில் உள்ள புரதத்தைப் பயன்படுத்தி, ஒரு புதிய பிளாஸ்டிக் படலத்தை தெற்கு ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

பாலின் முக்கிய புரதமான கால்சியம் கேசினேட், ஸ்டார்ச் மற்றும் பென்டோனைட் நேனோக்கிளே ஆகியவற்றை திரட்டிச் சேர்க்கும்போது உயிரியல் பாலிமர் கிடைக்கிறது.

உணவுப் பொட்டலங்களுக்குத் தேவையான வலிமையும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும் விதத்தில், பாலிலுள்ள பொருட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சாதாரண பிளாஸ்டிக்குகள் பல நுாற்றாண்டுகள் அழியாமல் நிலத்தில் தங்கிவிடும். ஆனால், பால் பிளாஸ்டிக், சாதாரண மண்ணில், ஏறத்தாழ 13 வாரங்களிலேயே முழுமையாக மட்கிவிடும் என்று பரிசோதனைகளில் உறுதியாகிஉள்ளது.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும், நச்சுக்களைக் கொண்டவை செயற்கைப் பாலிமர்கள். அவற்றுக்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க, பாதுகாப்பான மாற்றுகளைக் கண்டறிய, உலகமெங்கும் நடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. இத்தகைய மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக்குகள், சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதோடு, செயற்கைப் பாலிமர்களால் மனித ஆரோக்கியத்திற்கும் சூழலியலுக்கும் ஏற்படும் அபாயங்களையும் கணிசமாகக் குறைக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap