
1. பச்சை கடல் ஆமைகள் பூமியின் காந்தப்புலத்தை திசைகாட்டியாக பயன்படுத்து கின்றன. நீண்ட நேரம் ஒரே திசையில் நீந்தும் இந்த ஆமைகள், வழி மாறியதை உணரும் போது மட்டுமே நிறுத்தி, தமது திசையை சரி செய்து கொள்கின்றன. எனவே, சுற்றி வளைத்து சென்றே இவை இலக்கை அடைகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
![]() |
2. கிச்சுக்கிச்சு மூட்டப்படும் போது சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளும், மனிதக் குழந்தைகளும் ஒரே தாளகதியில் சிரிக்கின்றன என்கிறது, பிரிட்டனிலுள்ள வார்விக் பல்கலை விஞ்ஞானிகளின் ஆய்வு. குரங்குகளை விட மனிதக் குழந்தைகளின் சிரிப்பின் வேகம் அதிகம். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியால் சிரிப்பின் வேகம் அதிகரித்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
![]() |
3. தீக்காயங்களால் ஏற்படும் தழும்புகளை தடுக்க உதவும், 'அச்சிடத்தக்க மை' அல்லது 'ஜெல்'லை உருவாக்க, ஆஸ்திரேலியாவின் சிட்னியில்உள்ள இன்வென்டியா லைப் சயின்ஸின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இன்வென்டியா உருவாக்கிய உயிரி அச்சு மை, ஆரோக்கியமான தோலை மறுபடியும் வளரச் செய்ய உடலைத் துாண்டுகிறது.
![]() |
4. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில், சீனாவின் புதிய 'லைன்ஷைன்' என்ற சூப்பர் கணினி முதலிடத்தைப் பிடித்துள்ளது. வழக்கமான சூப்பர் கம்ப்யூட்டரின் கணித் திறனுடன், செயற்கை நுண்ணறிவு திறனையும் ஒருங்கிணைத்து இயங்குகிறது லைன்ஷைன்.
![]() |
5. நாம் பேசுகையில், ஒரு சொல்லை உச்சரிப்பதற்கு முன், மூளைக்குள் முழு வாக்கியம் உருவாகிறது என, அமெரிக்க மாசாசூசெட்ஸ் நரம்பியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். மொழி என்பது மூளை முழுதும் கூட்டாகச் செய்யும் செயல்பாடு என்றே முன்னர் வல்லுநர்கள் கருதினர். ஆனால், பெயர்ச் சொல், முற்றுப்பெரும் வாக்கியம் என்று ஒவ்வொன்றுக்கும் உரிய தனித்தனி நியூரான்கள் மூளையில் உள்ளன என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.




