Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/ஏலியன்களால் அனுப்பப்பட்டதா வால் நட்சத்திரம்?

ஏலியன்களால் அனுப்பப்பட்டதா வால் நட்சத்திரம்?

ஏலியன்களால் அனுப்பப்பட்டதா வால் நட்சத்திரம்?


PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபத்தில் சூரிய மண்டலத்தில் ஒரு சிறிய வால் நட்சத்திரம் நுழைந்தது. நாசாவின் அட்லஸ் தொலைநோக்கி இதை முதன்முதலில் கண்டு பிடித்தது. இதற்கு 3I/ATLAS என்று பெயரிடப்பட்டது.

சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வருகிற இது போன்ற விண்வெளிப் பொருட்களுக்கு, 'இன்டர்ஸ்டெல்லார் ஆப்ஜெக்ட்' என்று பெயர்.

இந்த வால் நட்சத்திரம் அட்லஸ் 20 கிலோ மீட்டர் நீளமானது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்ஸ்டெல்லார் பொருட்களிலேயே இது மிகப்பெரியது. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், இதில் சில மேகங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனுடைய மையம் பனிக்கட்டிகளால் ஆனது என்றும் தெரிவித்தனர். டிசம்பர் மாதத்தில் பூமியில் இருந்து 27 கோடி கிலோமீட்டர் துாரத்தில் இருக்கும். ஆனால், இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இது, சாதாரண வால் நட்சத்திரம் தான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலையைச் சேர்ந்த அவிலோப் என்கிற ஒரு விஞ்ஞானி, 'இந்த அட்லஸ் முதலில் வால் நட்சத்திரமா அல்லது விண்கல்லா என்பதை கண்டறிய வேண்டும். இது, திட்டமிட்டு சூரிய மண்டலத்துக்கு ஏலியன்களால் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.

'டார்க் பாரஸ்ட் ஹை பாதீசிஸ்' என்று ஒரு கருதுகோள் உண்டு. அதன்படி இந்த பிரபஞ்சத்தில் பிற நட்சத்திர மண்டலங்களில், எண்ணற்ற நாகரிகங்கள் மனிதர்களை போல வாழ்கின்றன. ஆனால், தங்களுடைய இருப்பு பிறருக்கு தெரியவந்தால் தங்களுக்கு ஆபத்து நிகழ்ந்துவிடும் என்பதால், அவை தங்களை மறைத்துக் கொண்டு வாழ்கின்றன.

இந்த அட்லஸ் வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து, அது ஏலியன்களால் அனுப்பப்பட்டது என்பது உறுதியானால், இந்த கருதுகோள் உண்மையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap