/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
ஒளிரும் ஒயிட் ஹவுஸ்; ஒளியில் ஒரு நயாகரா
/
ஒளிரும் ஒயிட் ஹவுஸ்; ஒளியில் ஒரு நயாகரா
PUBLISHED ON : அக் 30, 2024

தீபாவளி என்றாலே ஞாபகத்திற்கு வருவது பட்டாசு. பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை. மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ, குட்டீஸ்கள் கும்மாளமிட தீபாவளி உற்சாகத்திற்கு பலம் சேர்ப்பது இது. ஆண்டிற்கு ஆண்டு புதுமையை புகுத்தி அனைவரும் விரும்பும் வகையில் புதிய பட்டாசுகளை உருவாக்குகின்றனர் சிவகாசி தொழிலாளர்கள். இந்த ஆண்டும் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்கும் வகையில் உருவான பட்டாசுகளை பார்ப்போம்.
மின்னல் மினியான்ஸ்
புஸ்வானத்தை பற்ற வைத்தால் ஒரே ஒரு கலரில் பொங்கி வரும். ஆனால் இந்த கார்ட்டூன் பொம்மை மினியான்ஸை பற்ற வைத்தால் பச்சை சிவப்பு கலரில் வண்ணமயமாக காட்சியளிக்கும். பொம்மையை கையில் வைத்து விளையாடலாம். ஆனால் இதனை கைக்கெட்டும் துாரத்தில் நின்று ரசிக்க முடியும் குட்டீஸ்களே.
அசர வைக்கும் ஆஸ்கர்ஸ்
ஆஸ்கர் அவார்டு வாங்குவதற்கு சினிமா துறைக்கு செல்ல வேண்டாம். சிவகாசி வெடியை வாங்கினால் போதும். இதை பற்ற வைத்தால் 275 அடி உயரத்தில் சிவப்பு வண்ண வட்டமாக விரிந்து வானில் சுற்றும். அந்த ஆஸ்கரை வாங்கினால் பெருமை; இந்த ஆஸ்கரை பார்த்தாலே பெருமைதான்.
ஒளிரும் ஒயிட் ஹவுஸ்
ஒவ்வொருவருக்கும் அமெரிக்கா சென்று ஒயிட் ஹவுஸ் பார்க்க ஆசை இருக்கும். ஆசையை நிறைவேற்ற வந்துள்ளது ஒயிட் ஹவுஸ் வெடி. இதைபற்ற வைத்தால் வெள்ளை மாளிகையாக காட்சி அளிக்கும். ஹவுஸ் உள்ளே செல்ல ஆசைப்படக்கூடாது. தள்ளி நின்று ரசியுங்கள்.
சொர்க்கமாக சோனிக்
நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்க முடியவில்லை என கவலை வேண்டாம். இந்த வெடியை பற்ற வைத்தால் 300 அடிக்கும் மேலே சென்று 100 அடி சுற்றளவில் வயலட் வண்ணத்தில் நீரூற்று போல சொர்க்கமாக காட்சியளிக்கும். பட்டாசு வரலாற்றில் வயலட் வண்ணத்தில் காட்சி புதுமை.
ஜாலியாக கொண்டாட ஜாஸ்மின் பிளவர்
மல்லிகைப்பூ விலை ஏறிவிட்டது என கவலைப்பட வேண்டாம். இந்த ஜாஸ்மின் பிளவர் வெடியை பற்ற வைத்தால் மல்லிகைப் பூவை சிதறவிட்டது போல் காட்சியளிக்கும். அந்தப் பூவை தலையில் வைக்கலாம். இந்த பூவை தள்ளி வைக்க வேண்டும்.
டக்கரான டான்சிங் சக்கார்
இந்த டான்சிங் சக்காரில் ஒரு முறை பற்ற வைத்தால் ஒரே நேரத்தில் பத்து சக்கரம் தரையில் விழுந்து சுற்றி சுற்றி டான்ஸ் ஆடும். சேர்ந்து ஆடலாம் ஆனால் சேகரித்து ஆடக்கூடாது.
சிவகாசி பட்டாசுகள் சூப்பரோ சூப்பர்!
குடையாக மாறும் கம்பி மத்தாப்பு எப்பொழுதும் தனித்தனி கம்பி மத்தாப்புகளை இரு கையிலும் பிடித்து சுற்றி சுற்றி விளையாடலாம். ஆனால் இந்த கம்பி மத்தாப்பை பற்ற வைத்தால் குடையாக மாறி தாமாகவே சுற்றி சுற்றி வரும்.
அந்தக் குடையை தலைக்கு மேல் பிடிக்கலாம். இந்தக் குடையை தள்ளி தான் பிடிக்க வேண்டும் இளைஞர்களே.