sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2024 - தொழில்

/

2024 - தொழில்

2024 - தொழில்

2024 - தொழில்


PUBLISHED ON : ஜன 01, 2025

Google News

PUBLISHED ON : ஜன 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன. 1: பேக்கிங் பொருட்களில் தயாரிப்பு தேதி, விற்பனை விலை அச்சிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

ஜன. 1: கார்ட்டூன் கதாபாத்திரமான 'மிக்கி மவுஸ்' தொடர்பான 'டிஸ்னி' நிறுவனத்தின் 95 ஆண்டு கால காப்புரிமை காலாவதியானது.

ஜன. 5: பெட்ரோல் உடன் எத்தனால் கலப்பு. மத்திய அரசுக்கு ரூ. 24,300 கோடி சேமிப்பு.

ஜன. 5: மலிவு விலை 'ஸ்குரூ' இறக்குமதிக்கு மத்திய அரசு தடை.

ஜன. 6: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என ஐ.நா., கணிப்பு.

ஜன. 8: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

ஜன. 18: அதிகளவில் தங்கம் இருப்பு வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா (8133.46 டன்) முதலிடம். இந்தியாவுக்கு 9வது இடம் (822.09 டன்).

ஜன. 24: பத்தாண்டுகளில் வருமான வரி செலுத்துபவர் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு.

ஜன. 26: ஐந்தாண்டுகளில் இந்தியாவில் கார் விற்பனை விலை 50 சதவீதம் அதிகரிப்பு.

பிப். 1: தொடர்ந்து ஏழு முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் சாதனை.

பிப். 13: இலங்கை, மொரீஷியஸ், அபுதாபியில் இந்தியாவின் யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை சேவை துவக்கம்.

மார்ச் 18: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தன் பேரனுக்கு ரூ. 240 கோடி மதிப்பு பங்குகளை பரிசாக வழங்கினார்.

ஏப். 8: மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின், சந்தை மதிப்பு முதன்முறையாக ரூ. 4 லட்சம் கோடியை எட்டியது.

ஏப். 11: லட்சத்தீவில் கிளை துவக்கிய முதல் தனியார் வங்கியானது ஹெச்.டி.எப்.சி.

மே 1: 127 ஆண்டுகால கோத்ரேஜ் நிறுவனம் இரண்டாக பிரிந்தது.

மே 1: ஜிம்பாப்வே 'ஜிக்' என்ற புதிய கரன்சியை அறிமுகம் செய்தது.

மே 1: ஏப்ரல் ஜி.எஸ்.டி.,வரி வருவாய் ரூ. 2.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

மே 30: இந்தியாவின் ரூபே கார்டு சேவை மாலத்தீவில் துவக்கம்.

ஜூலை 12: 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் நடந்தது.

ஜூலை 30: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முதலிடம்.

ஆக. 23: பங்குச் சந்தையில் ஈடுபட ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு 5 ஆண்டு தடை.

செப். 4: மியூச்சுவல் பண்டு திட்டத்தில் குறைந்தது ரூ. 250 முதலீடு செய்யலாம். இதற்கு முன் ரூ. 500 இருந்தது.

செப். 12: இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக ஷைலேஷ் சந்திரா தேர்வு.

செப். 12: அமெரிக்க விண்வெளி மையமான 'நாசா'விடம் இருந்து ஆர்டர் பெறும் முதல் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமானது 'பிக்சல்.

அக். 11: 'டாடா' அறக்கட்டளை தலைவரானார் நோயல் டாடா.

அக். 22: இந்தியாவின் யு.பி.ஐ., பரிவர்த்தனை மாலத்தீவில் அறிமுகம்.

நவ. 11: டாடா குழுமத்தின் 'விஸ்தாரா', ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைந்தன.

நவ. 26: கியூ.ஆர்.குறியீடு உள்ளிட்ட கூடுதல் வசதியுடன் 'பான் கார்டு 2.0' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நவ. 27: 'சாம்சங்' சி.இ.ஓ., வாக 86 ஆண்டுகளில் முதன்முறையாக அக்குடும்பத்தை சாராதவர் (கிம் கியூங் - ஆ) நியமனம்.

டிச. 1: உலகின் 'விக்' ஏற்றுமதி சந்தையில் இந்தியா (88% பங்கு) முதலிடம்.

டிச. 2: 'ஊபர் இந்தியா' நிறுவனத்தின் முதல் நீர்வழிப்போக்குவரத்து (படகு சவாரி) காஷ்மீரின் தால் ஏரியில் துவக்கம்.

டிச. 3: வங்கி கணக்குகளில் 'நாமினி' எண்ணிக்கையை 1ல் இருந்து 4 ஆக உயர்த்துவதற்கான மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றம்.

டிச. 3: பாட்டில் மினரல் குடிநீரை, அதிக ஆபத்தான உணவுப்பட்டியலில் சேர்த்தது இந்திய உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு அமைப்பு.

டிச. 6: 'சைபர் கிரைம்' மோசடியில் ஜன. - செப்., ல் இந்தியாவில் ரூ. 4636 கோடி ஏமாற்றப்பட்டது. 2.28 லட்சம் புகார்கள் பெறப்பட்டன.

டிச. 8: ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அலைபேசி கட்டணத்தை உயர்த்தின. இதனால் 55 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., க்கு மாறினர்.

டிச. 17: அலைபேசி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றது.

டிச. 18: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பறிமுதல் சொத்துகளை விற்று ரூ. 14,131 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டது.

டிச. 19: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 85.28 என சரிவு.






      Dinamalar
      Follow us