sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2024 நடந்த சினிமா நிகழ்வுகள்

/

2024 நடந்த சினிமா நிகழ்வுகள்

2024 நடந்த சினிமா நிகழ்வுகள்

2024 நடந்த சினிமா நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2025

Google News

PUBLISHED ON : ஜன 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிக படங்களில் நாயகி

பிரியா பவானி சங்கர் - 4

ரத்னம், இந்தியன் 2,

டிமாண்டி காலனி 2, பிளாக்

அதிக படங்களில் ஹீரோ

விஜய் சேதுபதி - 3

மெர்ரி கிறிஸ்துமஸ், மகாராஜா, விடுதலை 2

ஜிவி பிரகாஷ் - 3

ரெபல், கள்வன், டியர்

விஜய் ஆண்டனி - 3

ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர்

டும்...டும்

* நடிகை: கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்

* நடிகர்: சித்தார்த் - நடிகை: அதிதி ராவ் ஹைதரி

* நடிகை: ரம்யா பாண்டியன்- லோவல் தவான்

* நடிகர்: காளிதாஸ் ஜெயராம்- தாரிணி காளிங்கராயர்

பிரிவு

* இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் - சாய்ராபானு

* ஜிவி பிரகாஷ் குமார் - பாடகி: சைந்தவி

* நடிகர்: ஜெயம் ரவி - ஆர்த்தி

* இயக்குநர் சீனு ராமசாமி - - தர்ஷனா

விவாகரத்து

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

'கோட்' டாப்

தமிழில் 230 படங்கள் வெளியாகின. விஜய்யின் 'தி கோட்' ரூ.455 கோடி வசூலித்தது.

'அமரன்' அமோகம்

சிவகார்த்திகேயனின் 'அமரன்' படம், வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. ரூ.300 கோடி வசூலித்தது.

அஜித்திற்கு 'நோ'

அஜித், சிலம்பரசன், நயன்தாராவின் படம் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு அஜித்தின் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' வெளிவர உள்ளன.

தனுஷ்- நயன்தாரா மோதல்

நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் அனுமதி இல்லாமல் 'நானும் ரவுடிதான்' படக் காட்சிகளை இணைத்ததற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். தனுஷை விமர்சித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.

ரூ.1000 கோடி

தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படங்களாக வெளிவந்த 'கல்கி 2898 ஏடி', 'புஷ்பா 2' படங்கள் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தன.

* 'ஸ்திரீ 2', படம் ரூ. 850 கோடி வசூலித்து ஹிந்தியில் முதலிடத்தைப் பிடித்தது.

100 நாள்

ராமராஜனின் 'சாமானியன்', விஜய் சேதுபதியின் 'மகாராஜா', விஜயின் 'கோட்' படங்கள் 100 நாள் ஓடின.

விமர்சன சிக்கல்

தமிழில் 'இந்தியன் 2', 'கங்குவா' படங்களுக்கு சமூகவலைதளங்களில் வெளியான விமர்சனங்கள் சர்ச்சையானது. புதிய படங்கள் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகே விமர்சனங்கள் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.

இரண்டாம் பாக படங்கள்

'இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, சூது கவ்வும் 2, விடுதலை 2'

மறைவு

பாடகி: உமா ரமணன், பவதாரணி

நடிகர்கள்: டேனியல் பாலாஜி, மோகன் நடராஜன், காமெடி நடிகர்: சேஷூ

தயாரிப்பாளர்கள்: 'பசி' துரை, டில்லி பாபு,

இயக்குனர்கள்: சுரேஷ் சங்கையா, குடிசை ஜெயபாரதி

நடிகை: சிஐடி சகுந்தலா

இசையமைப்பாளர் விஜய் ஆனந்த்

ஏமாற்றிய ரஜினி, கமல்

ரஜினியின் 'வேட்டையன்', கமலின் இந்தியன் 2' படங்கள் வசூல் ரீதியாக ஏமாற்றத்தை தந்தன.

'மகாராஜா'

'மகாராஜா' படம் ரூ. 150 கோடி, 'அரண்மனை 4' படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்தன.

தெலுங்கு ஆதிக்கம்

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த 'லக்கி பாஸ்கர், புஷ்பா 2' படங்கள் வரவேற்பை பெற்றன.

அல்லு அர்ஜுன் கைது

ஐதராபாத்தில் 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சியை காண தியேட்டருக்கு நேரில் வந்தார் அல்லு அர்ஜுன். அப்போது நெரிசல் ஏற்பட பெண் ஒருவர் பலி. கைதான அல்லு அர்ஜுனுக்கு ஜாமின்.

பிரகாஷ்... பிரகாசம்

மிஷன் சாப்டர் 1, கேப்டன் மில்லர், சைரன், ரெபல், கள்வன், டியர், தங்கலான், அமரன் என 8 படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

ஆங்கில தலைப்பு

“மிஷன் சாப்டர், மெர்ரி கிறிஸ்துமஸ், ப்ளூ ஸ்டார், சிக்லெட்ஸ், ஈ மெயில், லவ்வர், சைரன், பர்த்மார்க், கிளாஸ்மேட்ஸ், கார்டியன், டெவில் ஹன்டர்ஸ், ரெபல், ஹாட் ஸ்பாட், த பாய்ஸ், டபுள் டக்கர், ஒயிட் ரோஸ், டியர், ரோமியோ, நெவர் எஸ்கேப், பைன்டர், ஸ்டார், எலக் ஷன், பி.டி.சார், ஹிட் லிஸ்ட், வெப்பன், லாந்தர், டீன்ஸ், போட், லைட் ஹவுஸ், பார்க், தி கோட், கொட்டேஷன் கேங், ஹக் மீ மோர், பிளாக், ராக்கெட் டிரைவர், சார், சீன் நம்பர் 2, பிளடி பெக்கர், பிரதர், சைலண்ட், பிளட் அன்ட் பிளாக், 2 கே லவ் ஸ்டோரி, மிய் யூ, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் உள்ளிட்ட தமிழ் படங்கள் ஆங்கிலத் தலைப்புடன் வெளியாகின.

சர்ச்சை

நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 'ஹேமா கமிட்டி' அறிக்கை மலையாளத் திரையுலகத்தில் புயலைக் கிளப்பியது.






      Dinamalar
      Follow us