தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கையும், மனிதனும்!

விதை...

செடியாக, மரமாக

பூ பூக்க

காய் காய்க்க

கனி கொடுக்க மறுப்பதில்லை!

சூரியன்...

ஒளி கொடுக்க

உயிர் கொடுக்க

வாழ வைக்க மறுப்பதில்லை!

மழை...

மண் நனைக்க

குளிர வைக்க

நன்னீர் கொடுக்க

வயல் நிறைக்க மறுப்பதில்லை!

நிலவு...

குளிர்ச்சி தர

தண்ணொளி தர

தென்றல் தர

நல்லுறக்கம் தர மறுப்பதில்லை!

மனிதனே...

மரங்களை அழித்தாய்

நீர் தடங்களை அடைத்தாய்

காற்றை அசுத்தமாக்கினாய்

விதைக்க தவறினாய்

விவசாயத்தை மறந்தாய்

இயற்கையை அழித்தாய்...

இன்று...

பருவம் மாறியது

மழை பொய்த்தது

விவசாயம் அழிந்தது

புவி வெப்பமயமானது

பஞ்சத்தை நோக்கி போகிறோம்!

விழித்துக் கொள் மனிதா...

பாதையை மாற்று

இயற்கையை நேசி

மரங்களை நட்டு

பருவ மழைக்கு அழைப்பு விடு!

நீர் நிலை பெருக்கி

விவசாயம் செழிக்க செய்து

இயற்கையோடு இணைந்து வாழ்

வரும் தலைமுறை வாழ்த்தட்டும்!

ஈஸ்வரி நந்தா,

ஈரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us