Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 19, 2025

Follow on Google

PUBLISHED ON : ஜன 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமலின் அதிநவீன, 'டெக்னாலஜி!'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த, விக்ரம் படம், அவருக்கு, ஒரு, 'கம்பேக்' கொடுத்த போதும், ஷங்கர் இயக்கத்தில் நடித்த, இந்தியன் - 2 படம், காலை வாரி விட்டது. இதனால், அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சில புதுமைகளை செய்ய திட்டமிட்டு வருகிறார், கமலஹாசன்.

அந்த வகையில் தற்போது, அமெரிக்காவில் முகாமிட்டுள்ள கமல், தன், 237வது படத்தில் புதுமையான, 'டெக்னாலஜி'யை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி, தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கப் போவதாக கூறுகிறார்.

— சினிமா பொன்னையா

நயன்தாராவுக்கு மறக்க முடியாத புத்தாண்டு!

மாதவனும், நயன்தாராவும், டெஸ்ட் என்ற படத்தில் இணைந்து நடித்த போது, நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். இதையடுத்து, 2025 புத்தாண்டு தினத்தின் போது, துபாயில் உள்ள, மாதவனின் இல்லத்துக்கு, தன் கணவருடன், 'விசிட்' அடித்துள்ளார், நயன்தாரா.

நயன்தாராவுக்கு இது மறக்க முடியாத புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை படகில் நடுக்கடலுக்கு அழைத்து சென்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார், மாதவன்.

எலீசா

தனுஷுடன், ராஷ்மிகா போட்ட, 'டீல்!'

தனுஷ் நடித்து வரும், குபேரா படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ள, ராஷ்மிகா மந்தனா, 'உங்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட எனக்கு, உங்கள் இயக்கத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது...' என்று கூறியிருக்கிறார்.

அதைக்கேட்ட தனுஷ், இட்லி கடை படத்தை அடுத்து, தான் இயக்கி நடிக்கும் படத்தில் அவரை நடிக்க வைக்க, 'டீல்' போட்டுள்ளார். அதோடு, ராஷ்மிகாவுக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால், அப்படத்தை, 'பான் இந்தியா' படமாக இயக்கவும் திட்டமிட்டு வருகிறார், தனுஷ்.

— எலீசா

பாலிவுட்டில், சாய் பல்லவி!

அமரன் படத்தை அடுத்து, ஹிந்தியில், ராமாயணம் என்ற படத்தில், சீதை வேடத்தில் நடித்து வருகிறார், சாய் பல்லவி. அடுத்து, அமீர்கானின் மகன் ஜுனைத்கான் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

குறிப்பாக, பாலிவுட்டில் நடிகையர், அசைவ நடிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சாய்பல்லவியோ, துளிகூட கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று சொல்லி, தன் திறமையை முன்னிறுத்தியே இந்த பட வாய்ப்புகளை கைப்பற்றி இருக்கிறார்.

எலீசா

அபிமானிகளை விடாமல் துரத்தும், தமன்னா!

ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 படங்களுக்கு பின், தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னா தற்போது, ரஜினியின், ஜெயிலர் -2 படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

அடுத்து, சமீபத்தில் மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு, 'விசிட்' அடித்த போது, தன் அபிமான, 'ஹீரோ'கள் மற்றும் இயக்குனர்கள் என, பலரிடம், 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கி, சந்தித்து, நட்பை புதுப்பித்து இருக்கிறார்.

'சினிமாவில் இன்னும் நான் நெடுந்துாரம் பயணிக்க ஆசைப்படுகிறேன். அதனால், என்னையும் உங்களோடு அரவணைத்து செல்லுங்கள்...' என, அன்பான வேண்டுகோள்வைத்துள்ளார், தமன்னா.

— எலீசா

ஒரே நேரத்தில், இரண்டு படங்களை முடித்த, அஜித்குமார்!

அஜித் நடித்த, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, பல மாதங்களாக கிடப்பில் உள்ளதால், அதையடுத்து, குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடிக்க துவங்கினார், அஜித். அதனால், தற்போது அந்த, இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் முடிந்ததுடன், இரண்டு படங்களுக்கும் அடுத்தடுத்து, 'டப்பிங்' பேசி முடித்து விட்டார், அஜித்குமார்.

'இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தால் வசூல் பாதிக்கும். அதனால், ஒரு படம் திரைக்கு வந்ததும், அடுத்த படத்தை சில மாதம் இடைவெளி கொடுத்து பின் வெளியிடுங்கள்...' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

லவ் டுடே நடிகர், அந்த படத்தின், 'ஹிட்' காரணமாக தற்போது, மூன்று படங்களில், 'ஹீரோ' ஆக நடித்து வருகிறார். அதோடு, முதல் படத்தில் நடிக்க, லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கியவர், புதிதாக தான் நடிக்க போகும் படங்களுக்கு, 12 கோடி ரூபாய் சம்பளம் தர வேண்டும் என, 'கெத்து' காட்டி வருகிறார்.

இதனால், இந்த நடிகரை ஓரிரு கோடிகளில் வளைத்து போட்டு விடலாம் என நினைத்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'ஒரு படம் ஓடுவதற்குள் இவ்வளவு அலம்பல் தேவையா?' என, மேற்படி நடிகரிடம் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். ஆனால், நடிகரோ, 'இதுதான் என் ரேட், முடிஞ்சா வெட்டு, இல்லேன்னா ஏறக்கட்டு...' என, 'சொடக்' போட்டு பேசி வருகிறார்.

சினி துளிகள்!

* லவ் டுடே படத்தை இயக்கி, நடித்த பிரதீப் ரங்கநாதன் தற்போது, டிராகன் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

* தான் இயக்கி நடிக்கும், காஞ்சனா - 4 படத்தில், பூஜா ஹெக்டேவை அழகான பேயாக காண்பிக்கப் போகிறாராம், ராகவா லாரன்ஸ்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap