Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: களம் காண்போம் வா!

கவிதைச்சோலை: களம் காண்போம் வா!

கவிதைச்சோலை: களம் காண்போம் வா!


PUBLISHED ON : மார் 16, 2025

Follow on Google

PUBLISHED ON : மார் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முகநுாலில் மூழ்கியது போதும்

முகவரியை உறுதியாக்கு

காலம் நமக்காக காத்திருக்காது

களம் காண்போம் வா!

கஞ்சாநெஞ்சர்கள் கலைந்து போகட்டும்

அஞ்சா நெஞ்சர்கள் அணிவகுக்கட்டும்

போதை என்பது ஒருவழிப் பாதை

போனவர் திரும்பாத புதைக்குழி பாதை!

ஐயாயிரம் பேர்

உன்னை பின் தொடர்வது

அருமை தான்

அதில் அடுத்த

வீட்டுக்காரனையும் சேர்த்துக் கொள்

அது தான் உனக்குப் பெருமை!

சாலையில் விபத்தென்றால்

முதலுதவியைக் கையிலெடு

மொபைல் போனை பையிலிடு

முடிந்தவரை உதவிக்கு தோள் கொடு!

பெண்களின் அங்கங்களை

அளவெடுப்பதை நிறுத்து

உறுப்புகளில் தான் மாற்றம்

உணர்வுகளில் அவர்களும்

மனிதர்களே என்பதை உணர்ந்து

பெண்மையை மதித்து போற்று!

நலம் விசாரி

நட்பு பாராட்டு

அன்பு செலுத்து

அக்கறை காட்டு

சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல

சொந்த பந்தங்களுக்கிடையிலும்!

எதுவும் செய்யாதிருந்தாலும்

பரவாயில்லை

'எதையாவது' செய்துவிடாதே

உனக்கும் பின்னே

ஓராயிரம் மந்தை ஆடுகள்

வழி மாற வேண்டாம்!

பெற்றவர்களோடு பெரியோரை வணங்கு

குருத்துமட்டை தான் நாளை

பழுத்த மட்டையாகிறது

இது புரிந்தால்

வாழ்க்கை வசந்தமாகும்!

முகநுாலில் மூழ்கியது போதும்

முகவரியை உறுதியாக்கு

காலம் நமக்காக காத்திருக்காது

களம் காண்போம் வா!

- ப.ராஜகோபால், மன்னார்குடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap