sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: மனிதநேயம் மகத்தானது!

/

கவிதைச்சோலை: மனிதநேயம் மகத்தானது!

கவிதைச்சோலை: மனிதநேயம் மகத்தானது!

கவிதைச்சோலை: மனிதநேயம் மகத்தானது!

1


PUBLISHED ON : ஜூன் 29, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 29, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுந்தவனுக்கும்

விழுந்தடித்து

எழுந்தவனுக்கும் தான் தெரியும்

முன்னேறும் பாதை

கரடு முரடானது என்று!

உழைப்பவனுக்கும்

உழைத்து களைத்தவனுக்கும் தான்

தெரியும்

வியர்வைத் துளிகள்

மதிப்பு மிக்க

மாணிக்க கற்கள் என்று!

கொடுப்பவனுக்கும்

கொடுத்து கொடுத்து

கரம் சிவந்தவனுக்கும் தான்

தெரியும்

தர்மம் உலகத்தில்

உயர்ந்தது என்று!

சிந்திப்பவனுக்கும்

சிந்தனைக்கு செயல்வடிவம்

கொடுப்பவனுக்கும் தான் தெரியும்

சாதிக்கும் வழிமுறைகள்

சிக்கலானவை என்று!

வாழ்ந்தவனுக்கும்

வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கும் தான்

தெரியும்

வாழ்க்கை ஒரு

போராட்ட களம் என்று!

கசப்புகளை மறப்பவனுக்கும்

தவறுகளை

மன்னிப்பவனுக்கும் தான் தெரியும்

மானிட பிறவியில்

மனித நேயம்

மகத்தானது என்று!

- எல்.மூர்த்தி, கோவை.

தொடர்புக்கு: 77087 71321





    • Dinamalar Events


    Dinamalar