Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: படிக்காதமேதை காமராஜர்!

கவிதைச்சோலை: படிக்காதமேதை காமராஜர்!

கவிதைச்சோலை: படிக்காதமேதை காமராஜர்!


PUBLISHED ON : செப் 28, 2025

Follow on Google

PUBLISHED ON : செப் 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்., 2 - காமராஜர் நினைவு நாள்

கல்வி கொடுத்தவன் கண் கொடுத்தவன்

கல்வி கண் திறந்த ஆசான்!

அறியாமை இருளை நீக்கி

கல்வி என்ற வெளிச்சத்தால்

தமிழ்நாட்டை

ஒளிர வைத்தவர்!

அரசியலில் துாய்மை

நேர்மை பணிவு

பண்பு கொண்ட

எளிமையின் சிகரம்!

மாசற்ற மாணிக்கம்

படித்தவர்களை

உருவாக்கிய

படிக்காத மேதை!

ஆயிரம் கோவில்

கட்டுவதை விட

ஒரு கல்விக்கூடம்

கட்டுங்கள் என்றவர்!

திருமணம் என்பதை மறந்து

தாய்ப்பாசம் என்ற ஒற்றை

சொல்லில் அடங்கியவர்!

துடிப்பான அரசியல்வாதி

பசியால் பள்ளிக்கு வராத

மாணவ சமுதாயத்திற்கு

மதிய உணவு

திட்டம் அளித்தவர்!

இந்திய அரசியலில்

ஆதிக்கம் செலுத்தியவர்

பிரதமர் பதவியை

ஒதுக்கியவர்!

கர்ம வீரர் காமராஜர்

சுயக்கட்டுப்பாடு

ஒழுக்கம் தவறாமல்

வாழ்ந்தவர்!

மனிதருள் புனிதர் நடமாடிய தெய்வம்

ஏழைகளின் காவலர்

எட்டும் கனியாக

இருந்தவர்!

- ஆர்.சீதாராமன், சீர்காழி.

தொடர்புக்கு: 98423-71679


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap