Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்ப்பூசணி, வெள்ளரி துண்டுகள் மற்றும் ஒரு பெரிய நெல்லிக்காய் மூன்றையும் அரைத்து அதனுடன் மிளகுத்துாள், சர்க்கரை சேர்த்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி பெறும்; உஷ்ணத்திற்கும் நல்லது

* பக்கோடாவில் கடலை மாவுக்குப் பதிலாக, பொட்டுக்கடலை மாவைப் பயன்படுத்தினால் சுவை கூடும். வயிற்றுக்கோளாறும் வராது

* ரவா கேசரியில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்தால் சுவை கூடும். நிறமும் அழகாக இருக்கும்; உடம்புக்கும் நல்லது

* பொட்டுக்கடலை மாவு, தேன், தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம் கலந்து உருண்டை பிடித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான, சுவையான தின்பண்டம் இது

* வெண்ணெய் காய்ச்சும்போது எலுமிச்சை இலைகள் போட்டால் நெய் சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருக்கும்

* உலர் திராட்சையை பன்னீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்

* புளிப்பில்லாத மாங்காய்களைத் தோல் சீவி, வேக வைத்து, சர்க்கரைப்பாகுடன் அடுப்பில் வைத்துக் கிளறி, ஜாமாக செய்து சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us