PUBLISHED ON : ஜூன் 29, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜப்பான் நாட்டில் உள்ளது, ஒகினாவா தீவு. இங்கு வாழும் மக்கள், 110, 120 வயது வரை நோயின்றி, ஆரோக்கியமாக வாழ்கின்றனர். இவர்களின் நீண்ட ஆயுளுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதில், உணவு முறையே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள், வைலட் நிற சர்க்கரைவள்ளி கிழங்குகளை தினமும் சாப்பிடுவதால் தான், ஆயுள் பலமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர், மருத்துவர்கள். இந்த கிழங்கில் அடங்கியுள்ள சத்துகள், மனித ஆயுளை நீட்டிக்க மிகவும் உதவுவதாக தெரியவந்துள்ளது. இவர்கள் உணவுகளில் இந்த கிழங்கு பல வகைகளில் சேர்க்கப்படுகிறது. இதனால், நோய்கள், இவர்களை நெருங்குவது இல்லையாம்.
ஜோல்னாபையன்

