Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : மார் 31, 2024

Follow on Google

PUBLISHED ON : மார் 31, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது, சிப்ஸ் போல் கிழங்கை சீவி, காய்ந்த மிளகாய், தனியா, பூண்டு, சீரகம், தேங்காய் எல்லாம் அரைத்து சேர்த்தால் வாசனை மூக்கைத் துளைக்கும்.

* சூப் செய்த பிறகு, அதனுடன், இரண்டு தேக்கரண்டி பார்லி தண்ணீரை கலந்து குடிக்கவும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

* பிசிபேளாபாத் செய்யும்போது வெங்காயத்துக்குப் பதிலாக மணத்தக்காளி வற்றல் அல்லது சுண்டைக்காய் வற்றலை வதக்கி போட்டால், புதுவித சுவையோடு இருக்கும்.

* பருப்பு பொடியுடன், சிறிது கசகசாவையும் வறுத்து பொடி செய்து சேர்த்தால் குழம்பு மற்றும் கூட்டு கெட்டியாக இருக்கும்.

* வித்தியாசமான சுவையுடன், வைட்டமின் சி உள்ள வடகத்திற்கு, நெல்லிக்காய்களை வேக வைத்து, விதைகளை நீக்கி, மிக்சியில் விழுதாக அரைக்கவும். வடக மாவில் இதை சேர்த்து, கிள்ளிப் போட்டு காய வைத்து எடுக்கவும்.

* ஜவ்வரிசி வடாம் துகள்கள் இருந்தால், அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப் போடுங்கள். பிறகு, பஜ்ஜி சுட்டு எடுத்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.

* டபுள் பீன்சுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். இதை பக்கோடா மாவில் கலந்து செய்தால் புதுவிதமான சுவையுடன் இருக்கும்.

* ப்ரிசரில் வைத்து கெட்டியான வெண்ணெயை, சூடான தோசைக்கல்லில் லேசாக தேய்த்து சப்பாத்தி, ரொட்டி, ரோஸ்ட் செய்தால், வித்தியாசமான ருசியுடனும், வாசனையுடனும் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap