/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - சிறக்கட்டும் தமிழ் புத்தாண்டு!
/
கவிதைச்சோலை - சிறக்கட்டும் தமிழ் புத்தாண்டு!
PUBLISHED ON : ஏப் 14, 2024

புத்தம் புதிய விடியலில்
புத்துணர்வு எழுச்சியில்
புதுமையின் பொலிவில்
புத்தாண்டு பிறக்கட்டும்!
தமிழன் தலை நிமிர்ந்து
தன்னம்பிக்கை விதைத்து
தடைகள் தகர்த்து
தரணியில் தடம் பதித்து
தமிழ் புத்தாண்டில்
தாழாது நிலைக்கட்டும்!
பசிப்பிணி போக்கும்
பசுமை வயல்கள்
பரந்து விரிந்து
பாரம்பரியம் காக்கட்டும்!
பிறக்கும் குரோதி ஆண்டு
பகைமை வீழ்ந்து
பகட்டு உணர்வு மறைந்து
பாவங்கள் களைந்து
பயணம் தொடரட்டும்!
மனிதம் காக்கும்மனம் சிறக்கட்டும்
மடமை போக்கும்
மாண்பு உருவாகட்டும்!
அச்சம் அகலட்டும்
அன்பு பிறக்கட்டும்
ஆனந்தம் மலரட்டும்
அறம் வெல்லட்டும்
ஆன்மிகம் தழைக்கட்டும்
ஆரவாரம் இசைக்கட்டும்
ஆளட்டும் புத்தாண்டு!
வறுமை வறட்சி மறைந்து
வளமும் நலமும் சிறந்து
வலிமை திறமை வளர்ந்து
வளமாகட்டும் புத்தாண்டு!
பொங்கி எழுந்திடு
ஆற்றல் விதைத்திடு
ஆளுமை அடைந்திடு
சிறக்கட்டும் தமிழ் புத்தாண்டு!
— வி. சுவாமிநாதன், சென்னை.