
கோடை காலம் துவங்கி விட்டது. குளிர்ச்சியான பானங்களை அருந்தி, கோடை வெப்பத்தை தணித்து கொள்ளுங்கள்.
இளநீர்:
'எலக்ட்ரோலைட்ஸ்' மற்றும் தாது உப்புகளை தரும் இளநீர் குடித்தால், உடலில் இருக்கும் அத்தனை செல்களுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
நீர் மோர்:
தயிரை நன்கு கடைந்து நீர் மோராக்கி, அதனுடன் கறிவேப்பிலை, கொத்துமல்லி, நறுக்கிய சிறிய இஞ்சித் துண்டுகள் சேர்த்து தாளித்துக் குடித்தால், உடம்பின் சூடு தணியும்; ஜீரணம் சரியாக நடக்கும்.
பானகம்:
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், நாம் குடிக்கிற ஓ.ஆர்.எஸ்., பானத்தின் இயற்கை, 'வெர்ஷன்' இது. சிறிதளவு புளித்தண்ணீரில், எலுமிச்சை சாறு, வெல்லக்கரைசல், இஞ்சிச்சாறு, ஏலக்காய்த் துாள் சேர்த்து குடிக்கவும். வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்த இதை குடித்தால், வியர்வை வாடை வராது; சிறுநீரக தொற்றும் ஏற்படாது.