sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 21, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.மாதவன், கோவை: எப்படி வாழ்வது மகிழ்ச்சியைத் தரும்?

சிக்கனமாக வாழ்பவர்களே, மகிழ்ச்சியாக இருக்க முடியும்!

தே.ராஜ், மதுரை: நட்பு யாருடன் இருக்க வேண்டும்?

நல்லவரிடம்! அப்படி ஒருவரிடம் நட்பு பாராட்டினால், உங்களை அறியாமையில் இருந்து, அறிவு பாதைக்கு அழைத்து செல்லும்!

எம்.இசக்கி, திருச்சி: இந்நாளில், யாரை புத்திசாலி என நினைக்கலாம்?

மனதிற்கு பிடித்த வேலையை யாரும் சிறப்பாக செய்து விடலாம்; அவன் திறமைசாலி. தனக்கு பிடிக்காத வேலையையும் தனக்கு பிடித்தபடி அமைத்துக் கொண்டு, அதை சிறப்பாக செய்பவன் புத்திசாலி!

எம்.அன்பழகன், நெல்லை: என் நண்பனிடம் அகங்காரம் அதிகம் உள்ளதே... அவனை எப்படித் திருத்துவது?

அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கிவிட்டால், நரக துன்பத்தை பின்னாளில், அனுபவிக்கும் நிலை உண்டாகும் என்று உங்கள் நண்பரிடம் கூறுங்கள்!

    

* கே.நடேஷ், புதுச்சேரி: ஒரு நல்லரசு எப்படி இருக்க வேண்டும்?

அரசியல் நெறி பிறழாமல், அறம் அற்றவற்றை நீக்கி, வீரத்தையும், மானத்தையும் முன்னிறுத்துவதே, நல்லரசாக இருக்கும்!     

* மு.சிவா, சென்னை: என் மதிப்பு வளர, நான் என்ன செய்ய வேண்டும்?

நாக்கையும், பர்சையும் அதிகமாகத் திறக்காதீர்கள்... அப்போது, தான் உங்கள் மதிப்பும், செல்வமும் வளரும்.

எம்.ராஜ், நெல்லை: எதில் நலம் காணலாம்?

எண்ணத்திற்கேற்ப வசதிகளை பெருக்குவதை விட, வசதிகளுக்கேற்ப எண்ணங்களைக் குறைத்துக் கொள்வதில் நலம் காணலாம்!






      Dinamalar
      Follow us