தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/பட்டாசு வெடிக்கும் போது...

பட்டாசு வெடிக்கும் போது...

பட்டாசு வெடிக்கும் போது...


PUBLISHED ON : அக் 19, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பட்டாசு வெடிக்கும் போது, ஜீன்ஸ், காட்டன் சுடிதார் போன்ற உடலோடு ஒட்டிய உடைகளைப் போட்டு வெடிக்க வேண்டும்

* நீண்ட வத்திகளை கொண்டு, பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள்

* புதுரக பட்டாசுகளை கொளுத்தும் முறை பற்றி, தயாரிப்பாளர் பதிவிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றுங்கள்

* பட்டாசு வெடிக்கும் போது, ஒரு வாளி நீர் மற்றும் மணல் பக்கத்தில் வைத்திருங்கள்

*  எரியும் ஊதுவத்தி, விளக்கு, அடுப்பு போன்றவைகளுக்கு அருகில் வெடிகளை வைக்காதீர்கள்

* புஸ்வாணம் கொளுத்தும் போது, சம தரையில் வைத்து, பக்கவாட்டில் நின்று கொளுத்துங்கள்

*  ராக்கெட் போன்ற பட்டாசுகள் ஆபத்தானவை. அவைகளை திறந்தவெளி இல்லாத இடங்களில் வெடிப்பது ஆபத்தானது

*  குழந்தைகள் தங்கள் சட்டைப்பைகளில் பட்டாசுகளை வைப்பதை தவிர்ப்பது நல்லது

*   பட்டாசுகளை பக்கவாட்டில் நின்று கொளுத்துங்கள்

* புகையில் சிக்கிக் கொண்டால், கீழே மண்டியிட்டு சுவர் ஓரமாக வெளியேறுங்கள்; பாதிப்பு குறையும்

* குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசு வெடியுங்கள்

* சாலைகளில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்

*  வெடிப்பட்டாசுகளை பெரியவர்கள் மேற்பார்வையில் வெடியுங்கள்

* பூந்தொட்டி, சங்கு சக்கரம், ராக்கெட் போன்ற பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்தாதீர்கள்

* வெடிப்பட்டாசுகளின் மீது, டப்பா அல்லது வேறு பொருட்களால் மூடி வெடிக்க கூடாது

* பட்டாசுகளை கொளுத்தியவுடன் சற்று துாரம் விலகி நில்லுங்கள்

* மின்சாரக் கம்பங்களின் அருகில் பட்டாசுகளை வைத்து வெடிக்காதீர்கள்

* ஆடையில் தீப்பற்றி கொண்டால், ஓடாதீர்கள். படுத்து உருளுங்கள்; தண்ணீரை ஊற்றி அணையுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us